செழுமையான நடன சமூகத்துக்கு முயற்சி

செழுமையான நடன சமூகத்துக்கு முயற்சி

4 mins read
73b07537-3f29-4900-8333-0e82287729e7
நடனமாடும் விருப்பத்தை மற்றவர்களின் கேலி, கிண்டலுக்குப் பயந்து கைவிடுவோருக்கும் பல்வேறு வகையான நடன பாணிகளைக் கற்றுக்கொண்டு ஆடுவதில் ஆர்வமுள்ளோருக்கும் களம் அமைத்துத் தருவதன் மூலம் நீண்டகால அடிப்படையில் சிங்கப்பூரில் செழுமையான நடன சமூகத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன இளையர்களுக்காக இளையர்களே தொடங்கி நடத்தும் 'சும்மா டான்ஸ்', 'பூகி பேஸ்' எனும் நடன இயக்கங்கள். படங்கள்: 'சும்மா டான்ஸ்', 'பூகி பேஸ்' -
multi-img1 of 3

காயத்­திரி காந்தி

இளை­ய­ர்­க­ளுக்கு நட­னத்­தின் மீதான ஈர்ப்­பும் ஈடு­பா­டும் கடந்த சில ஆண்­டு­க­ளாக அதி­க­ரித்து வரு­வதை தேசி­யக் கலை மன்­றம் 2019ஆம் ஆண்­டில் நடத்­திய கருத்­துக் கணிப்பு சுட்­டிக்­காட்­டு­கிறது.

இளை­ஞர்­க­ளுக்கு நட­னத்­தின் மீதான ஆர்­வம் அதி­க­ரிக்­கும் வேளை­யில், அவர்­கள் ஒரு பாது­காப்­பான சூழ­லில் நட­னத்தை முறைப்­படி கற்­றுக்­கொள்ள உத­வு­கின்­றன 'பூகி பேஸ்', 'சும்மா டான்ஸ்' போன்ற இளை­யர் இயக்­கங்­கள்.

ஒரே இயக்­கத்­தின் மூலம் பல நடன பாணி­களைக் கற்­றுக்­கொள்­ளும் வாய்ப்பை இவ்­வி­ரண்டு இளை­யர் இயக்­கங்­களும் வழங்கி வரு­கின்­றன. அடிப்­படை நடன முறை­கள், நாட்­டிய பாணி­கள் ஆகி­ய­வற்­றைக் கற்­றுக்­கொள்­வ­தற்­கான ஒருங்­கி­ணைப்­புத் தளங்­கள் இவை.

"நட­னத்­தின்­மீது மிகுந்த ஆர்­வம் அதி­க­ரித்து வரும் வேளை­யில், அதைக் கற்­க­வும் பயிற்சி செய்­ய­வும் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் இணைப்­பதற்­கு­மான தளங்­கள் குறை­வா­கவே இருந்­ததை உணர்ந்­தோம்," என்று கூறி­னார் 'பூகி பேஸ்' இயக்­கத்­தைத் தொடங்­கிய நால்­வ­ரில் ஒரு­வ­ரான லோகேஸ்­வ­ரன் சின்­னப்­பன்.

பல நட­னக் கலை­ஞர்­கள் தாங்­க­ளா­கவே அவ்­வப்­போது நட­னம் ஆடி­னா­லும், அதில் சமூ­கம் அல்­லது ஒற்­றுமை உணர்வு குறை­வா­கவே இருக்­கிறது. எல்­லா­ரை­யும் அர­வ­ணைக்­கும் நடன சமூ­கத்தை உரு­வாக்­கு­வ­தற்­கான ஒரு வாய்ப்­பைக் கண்­ட­தால்­தான் நால்­வ­ரும் ஒன்­று­சேர்ந்து 'பூகி பேஸ்' இயக்­கத்­தைத் தொடங்­கி­ய­தாக லோகேஷ் குறிப்­பிட்­டார்.

எல்லா நிலை­க­ளி­லும் உள்ள நட­ன­ம­ணி­க­ளுக்­கும் ஒரு தளத்தை அமைத்­துக் கொடுக்­கும் நோக்­கத்­துடன் ஆரம்­பிக்­கப்­பட்­டதுதான் 'சும்மா டான்ஸ்' என்­னும் இயக்­க­மும். "என்­னு­டைய நண்­பர்­கள் பல­ருக்கு நட­ன­மா­டும் ஆசை இருந்­தா­லும் தங்­க­ளால் சிறப்­பாக நட­ன­மாட முடி­யாது என்­னும் எண்­ணம் அவர்­க­ளுக்குள் நில­வி­யதை நான் அறிந்­தேன். தொடக்கநிலை நட­னக் கலை­ஞர்­கள், எந்த அனு­ப­வ­மும் இல்­லாத நட­னக் கலை­ஞர்­கள் போன்­றோர்க்கு வாய்ப்­பு­கள் குறை­வாக இருக்­கின்­றன.

"எனவே வாரந்­தோ­றும் நட­னத்­தில் ஆர்­வ­முள்ள நண்­பர்­க­ளோடு அவர்­க­ளுக்­குப் பழக்­க­மான தமிழ்ப் பாடல்­க­ளுக்கு நட­ன­மா­டத் தொடங்­கி­னேன். இதை நடன சமூ­கத்தை ஒருங்­கி­ணைக்­கும் நட­வ­டிக்­கை­யாக மாற்­றும் முயற்­சி­யில் உரு­வா­னது தான் இந்த 'சும்மா டான்ஸ்' இயக்­கம்," என்று கூறி­னார் இந்த இயக்­கத்­தின் இணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் அனி­ருத் ஸ்ரீவத்­சன்.

பல்­வேறு நடன பாணி­களை ஆராய்­வ­தற்­கான வாய்ப்­பை­யும் இவ்­வி­ரண்டு இயக்­கங்­களும் வழங்கி வரு­கின்­றன.

'பூகி பேஸ்' இயக்­கத்தை நடத்தும் ஸ்ருதி, லோகேஷ், சிவா, நஸீயா நால்­வ­ரும், 'இந்தோ-கன்­டெம்­ப­ரரி', 'ஹிப்­ஹாப்', 'குத்து ஸ்வாக்', 'டான்ஸ் ஹால்', 'ஜாஸ் ஃபங்க்' என தனித்­து­வமிக்க நடன பாணி­களைத் தனித்­த­னி­யா­க­வும் கல­வை­யா­க­வும் பயிற்­று­விக்­கின்­ற­னர்.

'சும்மா டான்ஸ்' இயக்­கத்­தி­னர் ஒவ்­வொரு மாத­மும் ஒரு கருப்­பொ­ரு­ளைக் கொண்டு தங்­கள் வகுப்­பு­களை நடத்தி வரு­கின்­ற­னர்.

"கருப்­பொ­ருள்­களை நட­னக் கலை­ஞர்­க­ளு­டன் நடத்­தும் உரை­யா­டல்­க­ள் மூலம் முடி­வெ­டுக்­கிறோம். கற்­றுத்­த­ரப்­படும் நடன பாணி­க­ளைப் பொறுத்து பயிற்­று­விப்­பா­ளர்­கள் மாறிக்­கொண்டே இருப்­பர்," என்று கூறி­னார் இதன் இணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் காட்­யானி ரெட்டி.

வகுப்­பு­களை 'சும்மா', 'நாட் சோ சும்மா' என இரண்டு பிரி­வு­க­ளாக இவர்­கள் பிரித்­துள்­ள­னர்.

"புதிய பாணி அல்­லது நட­னத்தை புதி­தாக கற்­றுக்­கொள்­பவர்­க­ளுக்­கான 'சும்மா' வகுப்­பு­கள் தன்­னம்­பிக்­கையை வளர்க்­கும் நோக்­கம் கொண்­டவை.

"வளர்ந்து வரும் நட­னக் கலை­ஞர்­களும், சவா­லான பாடங்­களை முயல விரும்­பு­வோர்க்­கும் 'நாட் சோ சும்மா' வகுப்­பு­களை நடத்­து­கி­றோம்," என்­றார் இதன் மற்­றொரு ஒருங்­கி­ணைப்­பா­ள­ரான நித்யா கிருஷ்­ணன்.

இளை­ஞர்­களை ஈர்க்க 'பூகி பேஸ்' மூன்று நாள் நடன முகாமை இவ்­வாண்­டுத் தொடக்­கத்­தில் நடத்­தி­யது. தற்­போது 'பூகி பேஸ் காணொளி தயா­ரிப்பு முதல் பாகம்' என்­னும் முயற்­சி­யில் ஈடு­பட்­டுள்­ளது.

"இதற்­காக, நேர்­மு­கத் தேர்வு ­ந­டத்தி, ஆர்­வ­முள்ள பங்­கேற்­பா­ளர்­க­ளைச் சேக­ரித்­தோம். நான்கு வெவ்வேறு பாணி­களில் நான்கு கலை­ஞர்­கள் நட­ன­மி­டும் காணொ­ளி­யைத் தயா­ரித்து வெளி­யி­டு­வதே எங்­க­ளின் இலக்கு," என்று கூறி­னார் 'பூகி பேஸ்' இயக்­கத்­தின் சிவ­பாலா மகேந்­தி­ரன்.

முழு­நேர வியா­பார ஆய்­வா­ள­ராக பணி­பு­ரி­யும் சிவ­பாலா, "இது­போன்ற புதிய முயற்­சி­கள் மூலம், இந்­திய சமூ­கத்­தில் நட­னக் கலை­ஞர்­களை மேம்­ப­டுத்­து­வது எங்­கள் இலக்கு. நட­னக் கலை­ஞர்­கள் அலங்­கா­ரக் கூறு­க­ளா­கக் கரு­தப்­ ப­டா­மல், அவர்­க­ளுக்கு உரிய மரி­யாதை வழங்­கப்­பட வேண்­டும். இது­போன்ற தயா­ரிப்­பு­களில் தங்­களை ஈடு­ப­டுத்­திக் கொள்­வ­தன் மூலம், இளம் நட­னக் கலை­ஞர்­கள் நம் உள்­ளூர் நட­னத்­தின் தரத்தை மேம்­ப­டுத்­து­கின்­ற­னர்," என்று குறிப்­பிட்­டார்.

"பூகி பேஸ் எனக்கு இதுபோல் ஒரு வாய்ப்பை வழங்­கா­மல் இருந்­தி­ருந்­தால், புதிய நடன பாணி­களில் ஆடும் தன்­னம்­பிக்­கை­யும் தைரி­ய­மும் இருந்­தி­ருக்­காது. பூகி பேசில் உள்ள பயிற்­றுநர்­கள், சிங்­கப்­பூ­ரில் உள்ள இந்­திய நட­னக் கலை­ஞர்­களுக்கு அவர்­க­ளின் சொந்த பாணி­களை பரி­சோ­திக்­க­வும் ஆராய்­வ­தற்­கும் பாது­காப்­பான சூழலை உரு­வாக்­கி­யுள்­ள­னர். எனது நட­னப் பய­ணத்தை நான் கட்­ட­மைத்­த­தற்கு அடித்­த­ள­மாக இது இருந்து வரு­கிறது," என்று கூறி­னார் நன்­யாங் தொழில்­நுட்ப பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பயி­லும் 25 வயது அருண் தவ­பா­லன்.

'சும்மா டான்ஸ்', 'பூகி பேஸ்' இரண்­டுமே ஒரு துடிப்­பு­மிக்க நடன சமூ­கத்தை உரு­வாக்க முனைந்­துள்­ளன. இவை நடத்­தும் வகுப்­பு­கள், முகாம்­கள் ஆகி­யவை மூலம் பல புதிய நட்­பு­களும் பிணைப்­பு­களும் உரு­வா­கி­யுள்­ளன. ஒரு சில நட­வ­டிக்­கை­க­ளால் மிகப் பெரிய மாற்­றம் வந்­து­வி­டாது. பல சிறிய படி­கள் மூலமே அந்த இலக்கை எட்ட முடி­யும். இப்­போது புகழ்­பெற்­றிருக்கும் நட­னக் கலை­ஞ­ர்களும் ஒரு காலத்­தில் தொடக்கநிலை­யில் இருந்­த­வர்­களே. விடா­மு­யற்­சி­யு­டன் கவ­னம் செலுத்­தி­னால் செழிப்­பான நடன சமூ­கத்தை இளை­யர்­க­ளால் உரு­வாக்க இய­லும்.

gayathri@sph.com.sg