லண்டன்: 2030ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண காற்பந்து போட்டிகளை ஏற்று நடத்த உக்ரேன் முன்வந்துள்ளதாக டைம்ஸ் செய்தி தெரிவித்துள்ளது. ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலுடன் இணைந்து உலகக் கிண்ண ஆட்டங்களை நடத்த உக்ரேன் விண்ணப்பித்துள்ளது. மூன்று நாடுகளும் சேர்ந்து போட்டிகளை நடத்துவது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகலாம். ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வரும் உக்ரேன், 2030ஆம் ஆண்டு எட்டு குழுக்களின் ஆட்டங்களில் ஏதேனும் ஒன்றின் ஆட்டங்களை ஏற்று நடத்தக்கூடும்.
உக்ரேன் 2030ல் போட்டிகளை நடத்தலாம்
1 mins read