'ஸ்டெம்' ஆற்றலை உணர்த்தும் விழா

'ஸ்டெம்' ஆற்றலை உணர்த்தும் விழா

2 mins read
59443678-d825-45c6-b24c-4927553c7ae8
எதிர்கால குடியிருப்பு வட்டாரம் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் உருவான படைப்பு. படம்: சிங்கப்பூர் அறிவியல் நிலையம் -

காயத்­திரி காந்தி

அறி­வி­யல், தொழில்­நுட்­பம், பொறி­யி­யல், கணி­தம் ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கும் 'ஸ்டெம்' துறை­க­ளின் ஆற்­றலை உணர்த்­தும் விழா­வுக்கு சிங்­கப்­பூர் அறி­வி­யல் நிலை­யம் ஏற்­பாடு செய்­துள்­ளது. உல­கில் நடக்­கும் துடிப்­பு­மிக்க உரு­மாற்­றங்­களை ஆராய்­வதை விழா அதன் கருப்­பொ­ரு­ளா­கக் கொண்­டுள்­ளது.

சிங்­கப்­பூர் அறி­வி­யல் நிலை­யத்­தின் 45வது ஆண்டு நிறை­வைக் குறிக்­கும் வகை­யில் விழா­வில் பற்­பல புது­மை­யான அனு­ப­வங்­கள் ஒன்­றி­ணைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

"இரு­வ­ழித் தொடர்­பு­டைய நிகழ்ச்­சி­கள் மூலம், இந்த விழா அனைத்து தரப்பு மக்­க­ளை­யும் ஒன்­றி­ணைக்­கும் என நான் நம்­பு­கிறேன்," என்று கூறி­னார் அறி­வி­யல் நிலைய வாரி­யத்­தின் தலைமை நிர்­வாகி திரு லிம் டிட் மெங்.

இணைப் பேரா­சி­ரி­ய­ரான திரு லிம், சமூக நல்­வாழ்­வுக்­கும் சிங்­கப்­பூர் போன்ற மக்­கள் நிறைந்த நக­ரங்­க­ளுக்­கும், 'இடங்­கள்' மிக முக்­கி­ய­மா­னவை என்­றும் 'ஸ்டெம்' துறை­களில் ஏற்­படும் முன்­னேற்­றங்­க­ளால்­தான் நாம் கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லுக்­குப்­பின் பாது­காப்­பான தொடர்­பு­களை மேற்­கொள்ள முடி­கிறது என்­றும் குறிப்­பிட்­டார்.

விழா, 'UNTAME 2022: Spaces to Places' என்ற பெய­ரில் அந்­தந்த இடங்­க­ளின் முக்­கி­யத்­து­வத்தை எடுத்­து­ரைத்து, அவற்­றின் உரு­வாக்­கம், இணைப்பு ஆகி­ய­வற்­றின் மூலம் மக்­களை ஒருங்­கி­ணைக்­கும் நோக்­கத்­தைக் கொண்­டுள்­ளது.

இந்த இடங்­கள் நான்கு முக்­கியப் பகு­தி­க­ளாக பிரிக்­கப்­பட்­டுள்­ளன. வாழ்­வி­டத்­தின் நிலைத்­தன்மை, வானி­யல், இணை­ய­வெளி­யில் தக­வல்­தொ­ழில்­நுட்­பத் திற­னும் செயற்கை நுண்­ண­றி­வும் மற்­றும் மன ஆரோக்­கி­யம் ஆகி­ய­வையே அந்த நான்கு பகுதிகளாகும். விழா டிசம்­பர் 11 வரை வெவ்­வேறு அங்­கங்­க­ளு­டன் நடை­பெ­ற­வுள்­ளது.

பல­த­ரப்­பட்ட மக்­களை ஈர்க்­கும் வண்­ணம் நடத்­தப்­படும் இந்த விழா­ பற்­றிய மேல்­வி­வ­ரம் அறிய, சிங்­கப்­பூர் அறி­வி­யல் நிலை­ய இணை­யப்­பக்­கத்தை நாட­லாம்.

gayathri@sph.com.sg