சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் ஏற்பாட்டில் காப்பிய விழா

சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் ஏற்பாட்டில் காப்பிய விழா

1 mins read

சிங்­கப்­பூர் தமிழ் இலக்­கி­யக் களம் ஆண்­டு­தோ­றும் ஏற்­பாடு செய்­யும் காப்­பிய விழா, வரும் 16ஆம் தேதி­யன்று காலை 10 மணிக்கு தேசிய நூல­கத்­தின் 5ஆம் தளத்­தில் உள்ள பாசி­பி­லிட்டி அறை­யில் நிக­ழ­ உள்ளது.

இவ்­வாண்டு மகா­பா­ர­தம் குறித்த சிந்­த­னை­கள் இடம்­பெறும். நிகழ்­வில் இளங்­கோ­வடி­கள் விருது வழங்­கப்­ப­ட­விருக்­கிறது. சிற்­று­ரை­யாக 'விது­ரன் மேன்மை' என்ற தலைப்­பில் கண்­ணன் சேஷாத்­ரி­யும் 'சூதும் வாதும்' என்­னும் தலைப்­பில் புதுச்­சே­ரி பேரா­சி­ரி­யர் நா இளங்­கோ­வும் உரை­யாற்றுவர்.

சிறப்பு விருந்­தி­ன­ராக இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தின் துணைத்­த­லை­வர் இரா. தினகரன் கலந்­து­கொள்கிறார்.