சிறுவர்களின் கல்விக் கனவை நனவாக்கும் ‘கிரியேட்’

காயத்­திரி காந்தி

கல்வி என்­பது எல்­லோ­ருக்­குமானது என்பதை அடித்­த­ள­மா­கக் கொண்டு, கிரா­மப்­பு­றச் சமூ­கங்­களில் உள்ள சிறு­வர்­களும் எளி­தில் கல்­வி­ய­றிவு பெறு­வதை தனது நோக்­க­மாக கொண்டுள்­ளது 'கிரி­யேட்'. கல்வி மற்­றும் தொழில்­மு­னைப்பு மூலம் சிறு­வர்­களை ஈடு­ப­டுத்­து­வ­தி­லும் ஊக்­கு­விப்­ப­தி­லும் கிரி­யேட் கவ­னம் செலுத்தி வரு­கிறது.

2018ல் மூன்று பேர் கொண்ட குழு­வு­டன் தொடங்­கப்­பட்ட இந்­தச் சமூக நிறு­வ­னம், தனது இலக்கை அடைய 'புரோ­ஜெக்ட் சம்­மிட்', 'புரோ­ஜெக்ட் மேதா', 'கற்க கச­டற', 'கிரி­யேட் டாக்ஸ்' எனப்­படும் நான்கு திட்­டங்­கள் மூலம் சிறு­வர்­க­ளின் கல்­விக்­காக நிதி திரட்டி வரு­கிறது. தொண்­டூ­ழி­யப் பய­ணங்­கள், கற்­பித்­தல் நிகழ்ச்­சி­களை நடத்­து­தல், இரு­மொழி நூல­கங்­க­ளைத் திறப்­பது, கல்வி வளங்­களை உரு­வாக்­கு­தல், கல்வி பற்­றிய எண்­ணங்­களை­யும் யோச­னை­க­ளை­யும் பகிர்ந்து­கொள்­ளு­தல் என ஒவ்வோர் அம்­சத்­துக்கு அதன் சொந்த நோக்­கத்­தை­யும் கொண்டு உள்­ளது கிரி­யேட்.

"கல்வி என்­பது முன்­னேற்­றத்­திற்­கான ஒரு கருவி. எனது எதிர்­கா­லத்­திற்கு அது முக்­கி­ய­மா­னது என்­பதை நான் உறு­தி­யாக நம்­பு­கி­றேன். சிங்­கப்­பூ­ரில் சிறந்த கல்­வி­யை­யும் வாழ்க்­கை­மு­றை­யை­யும் பெறு­வ­தற்­கான பாக்­கி­யம் எனக்கு கிடைத்­தது. ஆனால், உல­கெங்­கி­லும் உள்ள சிறு­வர்­க­ளுக்கு இது ஒரே மாதி­ரி­யாக அமை­யாது. மேலும், ஒவ்­வொரு சிறு­வ­ரும் கல்வியைப் பெற­வேண்­டும் என்­பதை நான் உறு­தி­யாக நம்­பு­கி­றேன். அவர்­க­ளுக்கு கிரி­யேட் மூலம் உதவ எண்­ணு­கி­றேன்," என்று கூறி­னார் கிரி­யேட்­டின் இணை நிறு­வ­னர் தேவி விஜ­யன்.

2016ல் அனைத்­து­லக அமைப்பு ஒன்­று­டன் நான் மேற்­கொண்ட தொண்­டூ­ழி­யப் பய­ணம், கிரி­யேட் நிறு­வ­னத்­தைத் தொடங்க வழி­வகுத்தது. பய­ணச் செலவு பற்றி கவ­லைப்­ப­டா­மல், தம்­மு­டன் கூடு­த­லான இளை­யர்­களை இந்­தப் பய­ணத்­தில் பங்­கேற்க ஊக்­கு­விக்­கும் திட்­டத்தை உரு­வாக்க விரும்­பி­ய­தால் 2017ல் 'புரோ­ஜெக்ட் சம்­மிட்' தொடங்­கப்­பட்­ட­தாக அவர் குறிப்­பிட்­டார்.

முழு­நேர ஆசி­ரி­யை­யாக பணி­பு­ரி­யும் திரு­வாட்டி தேவி, திரு கும­ர­வே­லு­வு­டன் 'கிரி­யேட்'டைத் தொடங்­கி­னார். இது­வரை இரு ஆண்டு விழாக்­கள், ஐந்து அங்­கா­டி­களை ஒருங்­கி­ணைத்து நடத்­தி­யுள்­ளது. நிலை­யான முறை­யில் நிதி திரட்­டு­வதே இந்த நட­வ­டிக்­கை­க­ளின் நோக்­கம். இந்த நிகழ்ச்­சி­களை நடத்­து­வ­தன் மூலம், தொழில்­மு­னை­வோர் மற்­றும் சிறு வணி­கர்­களை ஒன்­றி­ணைக்­கும் தள­மாக கிரி­யேட் அமை­கிறது.

"வெவ்­வேறு சிறு வணிக உரிமை­யா­ளர்­க­ளு­டன் தொடர்­பு­கொண்­ட­தில் நான் மகிழ்ச்­சி­ய­டை­கி­றேன். ஒவ்­வொ­ரு­வ­ரும் தங்­கள் தயா­ரிப்­பு­க­ளைக் காட்­சிப்­ப­டுத்­து­வதைப் பார்ப்­பது எனக்கு மன­நிறைவை அளித்­தது. தீபா­வ­ளிப் பண்­டி­கையை முன்­னிட்டு இது சிறந்த வழி­யாக அமைந்­தது" என்று கலி­தியா நிறு­வ­னத்­தின் உரி­மை­யா­ளர் பிரியா கூறி­னார்.

சென்ற மாதம் கிரி­யேட்­டின் ஏற்­பாட்­டில் சிறு­வர்­க­ளின் கல்­விக்கு நிதி திரட்ட நடந்­தே­றிய தீபாவ­ளிச் சந்­தை­யில் இவர் பங்­கேற்­றார்.

இந்த நட­வ­டிக்­கை­கள் மூலம் நிதி திரட்டி இந்­தியா, நேப்­பா­ளம், கம்­போ­டியா போன்ற நாடு­களில் உள்ள சிறு­வர்­க­ளுக்கு பள்­ளிக் கட்­ட­ணம் செலுத்­த­வும் பொருள்­களை­யும் வளங்­க­ளை­யும் வழங்க பங்­கா­ளித்­துவ அமைப்­பு­க­ளு­டன் சேர்ந்து ஆத­ர­வ­ளிக்­கிறது கிரி­யேட். அதோடு, தொண்­டூ­ழி­யப் பய­ணச் செல­வு­களை ஈடு­கட்­ட­வும் நிதி பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

"கிரி­யேட்­டு­டன் என் தொண்­டூ­ழி­யப் பய­ணத்­தைத் தொடங்கியதன் மூலம் என் கனவு நன­வா­கி­யுள்ளது. சிறார்­க­ளின் கல்­விக்கு உதவ எப்போ­துமே நான் உதவ விரும்­பு­கி­றேன். 2018ல் இந்­தி­யா­வுக்கு நாங்­கள் மேற்­கொண்ட தொண்­டூழி­யப் பய­ணத்­தின் மூலம் அங்­கு உள்ள ஒரு பள்­ளி­யில் நூல­கத்தை அமைக்க நாங்­கள் உத­வி­னோம். அங்­குள்ள சிறு­வர்­கள், ஆசி­ரி­யர்­களி­ட­மி­ருந்து என்­னால் நிறைய கற்றுக்­கொள்ள முடிந்­தது. தொண்­டூ­ழி­யப் பய­ணம் எனக்கு நிறை­வான அனு­ப­வ­மாக இருந்­தது," என்று கிரி­யேட்­டின் தொண்­டூ­ழி­யர்­களில் ஒரு­வ­ரான துர்கா தேவி கூறி­னார்.

கொவிட்-19 பெருந்­தொற்­றின்­போ­தும் சிறு­வர்­க­ளுக்கு உத­வி­யது கிரி­யேட்.

சிறு­வர்­க­ளின் கன­வு­களை நன­வாக்க, வரும் ஆண்­டு­க­ளி­லும் இன்­னும் பற்­பல நட­வ­டிக்­கை­களை நடத்­தும் திட்­டங்­களை அது கொண்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!