தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கொவிட்-19க்கு பிறகு முழுவீச்சில் 'எக்சர்சைஸ் வாலபி' பயிற்சி

3 mins read
9210227b-f16a-4650-aaa3-ac5f330a0dbc
(இடமிருந்து) திரு அர்ஜூன் ராதாகிருஷ்ணன், திரு ஜெரமி நெல்சன், திரு கோவிந்தராஜ் யோகேஷ். படங்கள்: சிங்கப்பூர் ஆயுதப் படை -
multi-img1 of 3

ஆ. விஷ்ணு வர்­தினி

சிங்­கப்­பூர் ஆயு­தப் படை வீரர்­கள் ஆஸ்­தி­ரே­லி­யா­வில் ஆண்­டு­தோறும் பங்­கு­பெ­றும் 'எக்­சர்­சைஸ் வாலபி' பயிற்சி, ஈராண்­டு­க­ளுக்­குப் பிறகு இவ்­வாண்டு, 32வது முறை­யாக முழு­வீச்­சில் நடை­பெற்­றது.

இப்­பயிற்சி­யில் 4,000க்கும் மேற்­பட்ட சிங்­கப்­பூர் ராணுவ வீரர்­களும் 360க்கும் மேற்­பட்ட ராணுவ வாக­னங்­களும் ஈடு­படுத்தப்பட்­டன.

ஆஸ்­தி­ரே­லி­யா­வின் குவீன்ஸ்­லாந்து மாநி­லம், ஷோல்­வாட்­டார் பே பயிற்­சித் தளத்­தில் ஆகஸ்ட் 28ஆம் தேதி­யி­லி­ருந்து அக்­டோ­பர் 11ஆம் தேதி­வரை பயிற்சி மேற்­கொண்டு வரு­கின்­ற­னர். ஷோல்­வாட்­டார் பே பகுதி, சிங்­கப்­பூ­ரை­விட நான்கு மடங்கு அதிக நிலப்­பரப்­பைக் கொண்­டுள்­ளது.

1990லிருந்து நடை­பெற்­று­வ­ரும் 'எக்­சர்­சைஸ் வாலபி', சிங்­கப்­பூர் ஆயு­தப்­ப­டை­யின் ஆகப்­பெ­ரிய வெளி­நாட்­டுப் பயிற்­சி­யா­கும். இவ்­வாண்­டின் பயிற்­சி­யில், ராணுவ வேவுத்­துறை குழுக்­க­ளால் இயக்­கப்­படும் 'வெலோஸ்-15' ஆளில்லா வான்­வெளி வாக­ன­ம் அறி­மு­கம் கண்­டது.

அப்­பாச்சி விமா­னங்­க­ளு­ட­னான 'கொ-ஆப்­ப­ரேட்­டிவ் லேசிங்' எனப்­படும் இயக்­க­முறை உட்­பட பல்­வேறு போர்க்­கால உத்­தி­களை உள்­ளூ­ரில் பயிற்­சிக்கு உட்­ப­டுத்த முடி­யாது. எனவே, அவற்றை 'எக்­சர்­சைஸ் வால­பி­'யில் மேற்­கொண்டு வரு­கிறது சிங்­கப்­பூர் ராணு­வம்.

கடந்த சில ஆண்­டு­க­ளாக ஆளில்லா வான்­வெளி வாகன தள­பத்­தி­ய­மா­னது, செயற்கை நுண்­ண­றிவு, தர­வுப் பகுப்­பாய்வு ஆகி­ய­வற்றை பயன்­ப­டுத்­தக்­கூ­டிய புதிய திட்­டங்­களை அறி­மு­கப்­படுத்தி­யுள்­ளது.

குறிப்­பாக, 'மொபைல் இமே­ஜரி டிசே­மி­னே­ஷன்' எனப்­படும் புது அமைப்பு, இலக்­கு­களை எளி­தில் கண்­ட­றிய உத­வு­வ­தாக குறிப்­பிட்­டார் ஹெரான்-1 விமா­னி­யான திரு அர்­ஜூன் ராதா­கி­ருஷ்­ணன். இது­போன்ற புது தொழில்­நுட்­பங்­களும் 'எக்­சர்­சைஸ் வால­பி­'யில் சோதித்துப் பார்க்­கப்­பட்­டன.

"மாறு­பட்ட நில அமைப்­பும் பல­மான காற்­றும் உள்ள ஆஸ்­தி­ரே­லி­யா­வில் பயிற்சி மேற்­கொள்­வது, பரிச்­ச­யம் இல்­லாத இடங்­களில் விமா­னம் இயக்­கும் திறனை மெரு­கூட்ட உத­வி­யுள்­ளது. விமானப் போக்­கு­வ­ரத்­துக் கட்­டுப்­பாட்டு செயல்­மு­றை­க­ளைப் பின்­பற்­று­வது முத­லி­ய­வற்­றி­லும் எங்­களை மேம்­படுத்­திக்­கொள்ள இப்­ப­யிற்சி வாய்ப்­ப­ளித்­துள்­ளது," என்­றார் திரு அர்­ஜூன்.

இரு பாகங்­க­ளா­கப் பிரிக்­கப்­பட்ட எக்­சர்­சைஸ் வால­பி­யின் இரண்­டாம் பகுதி அண்­மை­யில் முடி­வ­டைந்­தது. இதில், ராணுவ காவல் பிரிவு, ராணுவ வேவுத்­துறை பிரி­வு­கள், சிங்­கப்­பூர் குடி­ய­ரசு ஆகாயப்­ப­டை­யின் போர் விமா­னம் ஆகி­யவை ஈடு­பட்­டன. கடந்த மாதம் நிறை­வ­டைந்த முதல் பகுதி­யில், கவச, போக்­கு­வ­ரத்­துப் பிரி­வு­கள் பயிற்சி மேற்­கொண்­டன.

முதல் பகு­தி­யில் பயிற்­சி­யில் ஈடு­பட்ட சிஎச்-47 சினூக் ஹெலி­காப்­டர் விமா­னி­க­ளுக்கு, அவற்றை விமா­னந்­தாங்கி கப்­பல்­களில் பாது­காப்­பாக இறக்க உத­வும் நிபு­ண­ராக செய­லாற்­றி­னார் திரு ஜெரமி நெல்­சன்.

இர­வில் ஹெலி­காப்­டரை சரி­வர இயக்­கு­வ­தில் இவர் பல சவால்­களை எதிர்­கொண்­டார். தொடர் பயிற்­சி­க­ளின்­மூ­லம் இந்த இயக்க முறை தமக்­குப் பழக்­க­மா­கி­ய­தாக இவர் கூறி­னார்.

வானிலை பக­லில் மிக வெப்­ப­மா­க­வும் இர­வில் குளி­ரா­க­வும் இருக்­கும். ஆஸ்­தி­ரே­லிய ராணுவ வீரர்­கள் சில­ரி­டம் காய்ச்­சல், இரு­மல் அறி­கு­றி­கள் தென்­பட்­டன. எக்­சர்­சைஸ் வால­பி­யில் முதல் முறை­யாக பங்­கு­பெற்ற மருத்­துவ தாதி கோவிந்­த­ராஜ் யோகேஷ், ராணுவ வீரர்­க­ளுக்கு உடல்­ந­லம் பாதிப்பு ஏற்­ப­டும்­போது அதை எவ்­வாறு கையாள்­வது என்­பது குறித்த பல படிப்­பி­னை­க­ளைப் பயிற்­சி­யின் மூலம் தாம் பெற்­றுக்­கொண்­ட­தாக இவர் கூறி­னார். பர­ப­ரப்­பான சூழ­லில் மேல­தி­கா­ரி­க­ளு­டன் இணைந்து பணி­யாற்­றி­யது நல்ல அனு­ப­வ­மாக இருந்­த­தா­க­வும் யோகேஷ் கூறி­னார்.

ஆஸ்­தி­ரே­லிய தற்­காப்­புப் படை­யும் சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யும் இணைந்து நில, கடல் பயிற்­சி­களில் ஈடு­பட்ட 'எக்­சர்­சைஸ் டிரை­டண்ட்' செப்­டம்­பர் 23 முதல் அக்­டோ­பர் 3ஆம் தேதி­வரை நடை­பெற்­றது.

கொவிட்-19 சூழல் கார­ண­மாக 2020ல் ரத்து செய்­யப்­பட்ட எக்­சர்­சைஸ் வாலபி, கடந்த சிறிய அள­வில் நடை­பெற்­றது. இம்­முறை, கொவிட்-19க்கு எதி­ரான முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­க­ளு­டன் பயிற்­சி­யில் ஈடு­பட்­டது சிங்­கப்­பூர் ஆயு­தப் படை.