தேர்வு காலத்தில் பிள்ளைகளிடமிருந்து மின்னியல் சாதனங்களைப் பறிப்பது பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்

தொடக்­க­நிலை 3 முதல் 5 வரை பயி­லும் மாண­வர்­க­ளுக்­கான இறு­தி­யாண்­டுத் தேர்­வு­கள் இம்­மா­தம் நடை­பெ­று­கின்­றன. தேர்­வுக்கு படிப்­ப­தில் கவ­னம் செலுத்­தாமல் பிள்ளை­கள் மின்­னி­யல் சாத­ன விளை­யாட்­டு­களில் ஈடு­ப­டு­வதைக் காணும் பெற்­றோ­ருக்கு விரக்தி ஏற்படலாம்.

பிள்­ளை­கள் சாத­னங்­க­ளைப் பயன்­படுத்­தும் நேரத்­தைக் குறைக்க பொது­வாக பெற்­றோர் செய்­வது, தேர்­வு­கள் முடி­யும்­வரை மின்­னி­யல் சாத­னங்­க­ளைப் பிள்­ளை­க­ளி­டம் கொடுக்­கா­மல் இருப்­பதே.

ஆனால், நல்ல எண்­ணத்­தில் பெற்­றோர் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை, பிள்ளைகளிடம் பின்­ன­டைவை ஏற்­ப­டுத்­தக்­கூ­டும் என்று ஆசி­ரி­யர்­களும் நிபு­ணர்­களும் எச்­ச­ரிக்­கின்­ற­னர்.

"பிள்­ளை­கள் பாட நூல்­க­ளைத் திறந்து வைத்­தி­ருந்­தா­லும், அவர்­க­ளது கவ­னம் அவற்­றில் இருக்­காது. அவர்­க­ளது சிந்தனை­ மின்­னி­யல் சாத­னங்­க­ளின் மீதே இருக்­கும். சொல்­லப் போனால், நமக்கே தெரி­யா­மல் அவர்­கள் மின்­னியல் சாத­னங்­களை நாட முயற்சி செய்­வர்," என்று வெஸ்ட் குரோவ் தொடக்­கப்­பள்ளி ஆசி­ரி­யர் மேத்யூ சிம் கூறினார்.

இணை­யத்­தில் பிள்­ளை­கள் நேரம் செல­வி­டு­வ­தைக் குறைக்க உதவ, அவர்­கள் சூழ­லுக்கு தங்­க­ளைப் பழக்கிக்­கொள்ள அவ­கா­சம் வழங்க வேண்­டும்.

முக்­கி­ய­மாக, தேர்வு சம­யத்­தில் கணினி, தொலைக்­காட்சி, கைப்­பே­சி­யில் நேரம் செல­வி­டு­வ­தைக் குறைத்துக்­கொள்ள வேண்­டும் என்று பிள்­ளை­களிடம் சொல்­லி­விட்டு, பொழு­து­போக்கிற்­காக திரை முன்­னால் பெற்­றோர் மட்­டும் அமர்ந்­தி­ருப்­பது சிறந்த முன்­னு­தா­ர­ண­மா­கக் கரு­தப்­ப­டாது.

எனவே, தேர்வு முடி­யும்­வரை பெற்­றோ­ரும் திரை­யின் முன்­னால் நேரம் செல­வி­டு­வ­தைக் குறைத்­துக்­கொள்­வது பொருத்­த­மா­ன­தாக இருக்­கும் என நிபுணர்­கள் கூறு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!