உண்ட பின்னர் இவை எட்டும் கூடாது

உண்ட பின்னர் இவை எட்டும் கூடாது

3 mins read
15d4620d-2b4e-4037-a594-2f6a6e3b8a7a
உணவுக்குப் பிந்திய வேகமான உடற்பயிற்சி செரிமானத்தைப் பாதிக்கும். வயிற்றுக் குமட்டல், வயிற்று வலி போன்றவற்றுக்கு அது இட்டுச் செல்லக்கூடும். வாந்திகூட ஏற்படலாம்.படம்: ராய்ட்டர்ஸ் -

உண்ட பின்­னர் உடல்­ந­ல­னைப் பாதிக்­கும் சில பழக்­கங்­கள் அறவே கூடாது. அப்­ப­ழக்­கங்­கள் பெரும்­பா­லும் செரி­மா­னத்­தைப் பாதிக்­கும். நீண்­ட­கால பிரச்­சி­னை­க­ளுக்­கும் இட்­டுச் செல்­லக்­கூ­டும். அவற்­றைப் பார்க்­க­லாம்.

உண்ட பின்­னர் குளிக்க வேண்­டாம்

முத­லில், சாப்­பிட்ட பிறகு குளிக்­கக் கூடாது. சில­ருக்கு சாப்­பிட்­ட­பின் குளிக்­கும் வழக்­கம் உள்­ளது. குறிப்­பாக இர­வில் உண்ட பின்­னர் குளிப்­ப­தைத் தவிர்க்­க­வும்.

உண்ட பின்­னர் வயிற்­றுப் பகு­திக்கு அதிக ரத்­தம் செல்­லும். குளித்­தால் உடல் வெப்­ப­நிலை மாறும். உடல் வெப்­ப­நி­லையை சரி­செய்ய, வயிற்­றுப் பகு­தி­யில் உள்ள ரத்­தத்தை உடல் மற்ற பகு­தி­க­ளுக்கு அனுப்­பும். அத­னால் செரி­மா­னம் பாதிக்­கப்­படும்.

இத­னால் உட­லில் அமி­லத்­தன்மை அல்­லது மலச்­சிக்­கல் போன்ற பிரச்­சி­னை­கள் ஏற்­ப­ட­லாம். உடல் எடை­யும் கூட­லாம்.

பழங்­கள் சாப்­பி­டு­வ­தைத் தவிர்க்­க­வும்

பெரும்­பா­லா­னோர் சாப்­பிட்ட பிறகு பழங்­களை சாப்­பி­டு­வார்­கள். இதைச் செய்­வ­தன் மூலம் உடல்­ந­லத்­துக்­குப் பாதிப்பு ஏற்­படும்.

உண்­மை­யில், இதைச் செய்­வது வயிற்­றில் அமி­லத்­தன்­மையை உண்­டாக்­கும்.

மேலும், பழங்­களிலுள்ள சத்து உட­லில் அதி­கம் சேராது என்­றும் கூறப்­ப­டு­கிறது.

வேக உடற்­ப­யிற்­சி­யைத் தவிர்க்­க­வும்

உணவு உட்­கொண்ட பின்­னர், மெது­நடை செல்­ல­லாம். ஆனால் வேக­மான உடற் பயிற்சி கூடாது. உண­வுக்­குப் பிந்­திய வேக­மான உடற்­ப­யிற்சி செரி­மா­னத்­தைப் பாதிக்­கும். வயிற்­றுக் குமட்­டல், வயிற்று வலி போன்­ற­வற்­றுக்கு அது இட்­டுச் செல்­லக் கூடும். வாந்­தி­கூட ஏற்­ப­ட­லாம். அத­னால் உட­லில் அமி­லத்­தன்மை கூட­லாம்.

படுக்­கச் செல்­வ­தைத் தவிர்க்­க­வும்

சாப்­பிட்ட உட­னேயே படுக்­கச் செல்­வது நம்­மில் சிலர் செய்­யும் தவ­றா­கும். சில­ருக்கு உண்ட மயக்­கம் தூக்­க­மாக மாறும்.

அவ்­வாறு தூங்­கி­னால், உண­வைச் சரி­யாக செரி­மா­னம் செய்­யும் ஆற்­றலை வயிறு இழக்­கும். தூங்கி எழும்­போது நெஞ்­செ­ரிச்­சல் ஏற்­ப­ட­லாம்.

அல்­லது தூங்கி எழும்­போது உணவு செரிக்­கா­மல் இருப்­பது போன்ற உணர்வு பொழு­தையே கெடுக்­க­லாம்.

அத­னால்­தான் சாப்­பிட்ட உட­னேயே 10-15 நிமி­டங்­கள் நடக்க வேண்­டும் என்று கூறப் படு­கிறது.

நிறைய தண்­ணீர் குடிக்க வேண்­டாம்

உண­வு­நே­ரத்­தி­லும் உணவு உண்ட பின்­ன­ரும் நிறைய தண்­ணீர் குடிப்­ப­தைத் தவிர்க்க வேண்­டும். இந்­திய உண­வில் குழம்பு, சாம்­பார், ரசம், தயிர், போன்ற பல்­வேறு திர­வங்­கள் ஏற்­கெ­னவே உள்­ளன. அத்­து­டன் அள­வுக்கு அதி­க­மான தண்­ணீ­ரை­யும் குடித்­தால் செரி­மா­னம் மெது­வ­டை­யும்.

குனிய வேண்­டாம்

சாப்பிட்ட உட­னே அடிக்­கடி குனிந்து நிமி­ரும் செயல்­களில் ஈடு­பட வேண்­டாம். அத­னால் வயிற்­றில் அதிக அமி­லம் சுரக்­கும். வயிற்­றுக் கோளாறு ஏற்­ப­ட­லாம்.

தேநீர், காப்பி குடிப்­ப­தைத் தவிர்க்­க­வும்

காலை­யில் உணவு உண்­ட­பின்­னர், காப்பி அல்­லது தேநீர் குடிப்­பது சில­ரது வழக்­க­மாக இருக்­க­லாம். சிலர் மதிய அல்­லது இரவு உண­வுக்­குப் பின்­ன­ரும் அவ்­வாறு தேநீர் அல்­லது காப்­பி­யைக் குடிக்க விரும்­ப­லாம்.

ஆனால் அது உட­லுக்கு நல்­ல­தல்ல. காப்பி, தேநீர் ஆகி­ய­வற்­றில் ஃபீனலிக் அமி­லங்­கள் உள்­ளன. அவை உண­வில் உள்ள இரும்­புச் சத்து உள்­ளிட்ட சில வகை சத்­து­கள் உட­லில் சேர்­வ­தைத் தடுக்­கும்.

புகைப்­பி­டித்­தல்/ மது அருந்­து­தல்

சில­ருக்கு உண்­ட­வு­டன் புகை பிடிக்­கும் பழக்­கம் இருக்­கும். அல்­லது அவர்­கள் மது அருந்­தக் கூடும்.

ஏற்­கெ­னவே உட­லுக்­குக் கேடு விளை­விக்­கும் அப்­ப­ழக்­கங்­களை உணவு உண்ட பின்­னர் மேற்­கொள்­ளும்­போது, உடல் பாதிப்பு மேலும் அதி­க­ரிக்­கும். அத்­து­டன் உடல் எடை கூடும்.

உணவு உண்ட பின்­னர் ஒரே இடத்­தில் அம­ரா­மல் அங்­கும் இங்­கும் நடப்­பது அல்­லது ஏதா­வது செய­லிலோ ஈடு­ப­டு­வது நல்­லது.

ஆனால் அதை அள­வுக்கு அதி­க­மா­கச் செய்­வது உட­லுக்­குப் பிரச்­சி­னை­க­ளைத் தரும் என்று நிபு­ணர்­கள் எச்­ச­ரிக்­கின்­ற­னர்.