வேர்க்கடலை: பயனும் விளைவுகளும்

வேர்க்கடலை: பயனும் விளைவுகளும்

4 mins read
24c83de0-d0c7-4a56-8f21-02adb94c9208
அளவோடு வேர்க்கடலை சாப்பிடுவதால் பல நன்மைகள் உண்டு. மகாத்மா காந்திக்கும் வேர்க்கடலை பிடிக்கும். ஆட்டுப்பாலுடன் வேர்க்கடலையும் சாப்பிடுவார். கோப்புப் படம்: இந்திய ஊடகம் -

உலகம் முழுவதும் வேர்க்கடலை பிரபலம். வேர்க்கடலை பற்றி அறிந்திராதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். வறுக்கப்பட்ட மொறுமொறுப்பான வேர்க்கடலையை வாயில் போட்டால் மென்றுகொண்டே இருக்கலாம். ஒரு பக்கம் வேர்க்கடலையை நொறுக்கிக் கொண்டே வேலையும் பார்க்கலாம். வறுத்த வேர்க்கடலையைவிட அவித்த வேர்க்கடலை இன்னும் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. அதே சமயத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

வேர்க்கடலையை பல வகையில் சுவைத்து மகிழலாம்.

1. பொதுவாக வேர்க்கடலையை பச்சையாக அல்லது வறுத்து அதில் சிறிது உப்பு, மிளகுப் பொடி தூவி சாப்பிடலாம்.

2. வேக வைத்த வேர்க்கடலையை சாலட்டில் சேர்த்து சாப்பிடலாம்.

3. கையளவு வேர்க்கடலையை காலை உணவின்போது சீரியலில் (Cereal) சேர்த்து சாப்பிட்டால் சுவை மேலும் கூடும்.

4. சிறிய துண்டுகளாக வெட்டப்பட்ட வேர்க்கடலையை கெட்டித் தயிரில் சேர்த்து உண்டால் நடுநடுவே நறுக்கென்று இருக்கும்.

5. வேர்க்கடலையை மாற்று வழிகளிலும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். வேர்க்கடலை எண்ணெய் (கடலை எண்ணெய்) உணவுக்கு ருசியைச் சேர்க்கும்.

1. உடல் எடை­யைக் குறைக்க உத­வு­கிறது: ஒவ்­வொரு நாளும் மித­மான அளவு வேர்க்­க­ட­லையை உட்­கொள்­வது உடல் எடையை குறைக்க உத­வும். இதில் கேலரி அதி­கம் இருந்­தா­லும் அவை அனைத்­தும் நல்ல கொழுப்­பு­.

2. இதய ஆரோக்­கி­யத்­துக்கு உத­வும்: வேர்க்­க­டலை உட்­கொள்­வது இத­யம் தொடர்­பான நோய் ஏற்­படும் வாய்ப்­பு­களைக் குறைக்­கும் என்று சில ஆய்­வு­கள் தெரி­விக்­கின்­றன.

ஆரோக்­கி­ய­மான இத­யத்­துக்­குத் தேவை­யான ஊட்­டச்­சத்­து­ வேர்க்­ கடலை­யில் உள்­ளது. கெட்ட கொழுப்­பின் அளவை குறைக்க உத­வும் நார்ச்­சத்­தும் இதில் உள்­ளது. வேர்க்­க­ட­லை­யில் 'ஆன்­டி­ஆக்­ஸி­டன்ட்­கள்' மற்­றும் 'அமினோ' அமி­லங்­கள் உள்­ளன.

அவை ரத்த நாளத்தின் உட் ­பு­றத்தை பாது­காப்­பாக வைத்­தி­ருக்­கின்­றன, இத­னால் ரத்தநாளத்தின் தடிப்பு போன்ற இத­யப் பிரச்­ச­னை­க­ளுக்கு எதி­ராக உங்­கள் இத­யத்தைப் பாது­காக்­கிறது.

மேலும், நியூ இங்­கி­லாந்து ஜர்­னல் ஆஃப் மெடி­சி­னில் வெளி­யி­டப்­பட்ட ஓர் ஆய்­வின்­படி, இந்த மொறு­மொ­றுப்­பான வேர்க்­க­ட­லை­கள் இதய நோயால் இறக்­கும் அபா­யத்தைக் குறைக்­கிறது.

3. சரு­மத்­துக்கு நல்­லது: வேர்க்­ க­ட­லை­யில் உள்ள ஊட்­டச்­சத்து 'ஈ', ஊட்­டச்­சத்து 'சி' ஆகி­யவை சூரி­ய­னின் கடு­மை­யான புற ஊதாக் கதிர்­களில் இருந்து சரு­மத்­தைப் பாது­காக்­கிறது என்று ஆராய்ச்சி காட்­டு­கிறது.

கூடு­த­லாக, ஊட்­டச்­சத்து 'சி' இருப்­பது உங்­கள் சரு­மத்­திற்கு நெகி­ழும் தன்­மையை அளிக்­கிறது, இது, சரு­மம் பிர­கா­ச­மா­க­வும், மென்­மை­யா­க­வும் இருக்க உத­வும்.

'ஆன்­டி­ஆக்­ஸி­டன்ட்', 'ரெஸ்­வெ­ராட்­ரோல்' போன்­றவை மெல்­லிய கோடு­கள், சுருக்­கங்­கள் மற்­றும் கரும்­புள்­ளி­கள் உட்­பட வய­தான அறி­கு­றி­க­ளைக் கூட தாம­தப்படுத்து­ கிறது. இந்த 'ஆன்­டி­ஆக்­ஸி­டன்ட்' 'சொரி­யா­சிஸ்' போன்ற தோல் நோய்­க­ளுக்கு அறி­வி­யல் பூர்­வ­மாக நிரூ­பிக்­கப்­பட்ட சிகிச்­சை­யா­கும்.

வேர்க்­க­டலை. உட­லில் இருந்து அனைத்து நச்­சு­க­ளை­யும் கழுவி வெளி­யேற்­ற­வும் செய்­கிறது.

4. மூளையைக் கூர்­மை­யாக்க உத­வும்: மூளையை ஆரோக்­கி­ய­மா­க­வும், சுறு­சு­றுப்­பா­க­வும், கூர்­மை­யா­க­வும் வைத்­தி­ருக்க ஊட்­டச்­சத்து பி1, ஃபோலேட் (Folate) மற்­றும் நியா­சின் போன்ற ஊட்­டச்­சத்­து­கள் தேவை. தின­சரி உண­வில் வேர்க்­க­ட­லையை சேர்த்­துக் கொள்­ளும்­போது, மூளையை மிக­வும் சுறு­சு­றுப்­பா­க­வும், ஆரோக்­கி­ய­மா­க­வும், கூர்­மை­யா­க­வும் வைத்திருக்க உதவும். ஊட்­டச்­சத்து பி-1 மற்­றும் நியா­சின் போன்­றவை மற­தி ­நோய் பாதிப்­பி­லி­ருந்தும் காக்க உத­வு­கிறது. வேர்க்­க­ட­லை­யில் உள்ள ரெஸ்­வெ­ராட்­ரோல் (Resveratrol) எனப்­படும் பயோ­ஆக்­டிவ் ஆன்­டி­ஆக்­சி­டன்ட் (Bioactive Antioxidant) நிறைந்­துள்­ளது. இது வாய்­மொழி மற்­றும் அறி­வாற்­றல் திறன்­களை மேம்­ப­டுத்­து­கிறது. மேலும், வேர்க்­க­ட­லை­யில் உள்ள பாலி­பி­னால்ஸ் (Polyphenols) அறி­வாற்­றல் மற்­றும் மன­நல கோளா­று­க­ளுக்கு எதி­ராக உத­வு­கிறது, இது, மூளையை ஆரோக்­கி­ய­மாக வைத்­தி­ருக்­கிறது.

5. புர­தம் நிறைந்த வேர்க்­க­டலை: குழந்­தை­க­ளின் சரி­யான மற்­றும் ஆரோக்­கி­ய­மான வளர்ச்­சிக்கு தேவை­யான புர­தத்­தின் தேவையை தின­மும் வேர்க்­க­டலை சாப்­பி­டு­வ­தன் மூலம் பூர்த்தி செய்­ய­லாம். வேர்க்­க­ட­லை­யில் புர­தம் நிறைந்­துள்­ளது, போது­மான புர­தம் உட்­கொள்­வ­தால் எந்த காயத்­தை­யும் குணப்­ப­டுத்த உத­வு­கிறது.

6. எலும்­பு­களை வலு­வாக்கு கிறது. வயது ஆக ஆக உட­லில் இருக்­கும் பல எலும்­பு­கள் பல­வீ­ன­ம­டை­கின்­றன. இத­னால் சுறு­சு­றுப்பு மற்றும் வலிமை குறை­கிறது. வேர்க்­க­ட­லை­யில் உள்ள ஊட்­டச்­சத்­து­ மற்­றும் பிற அத்­தி­யா­வ­சிய புர­தச்­சத்து எலும்­பு­க­ளின் வலி­மையைப் பரா­ம­ரிக்க உத­வு­கிறது.

7. பார்­வையை மேம்­ப­டுத்த உத­வும்: கண் ஆரோக்­கி­யத்­துக்கு ​​​​சில பச்சை இலைக் காய்­க­றி­கள் மற்­றும் வேர்க்­க­டலை சிறந்த உண­வுப் பொருள்­க­ளா­கக் கரு­தப்­ப­டு­கிறது. வேர்க்­க­ட­லை­யில் உள்ள துத்­த­நா­கம் ஊட்­டச்­சத்து Aஐ மாற்ற உத­வு­கிறது,

இது தெளி­வான மற்­றும் ஆரோக்­கி­ய­மான கண்­பார்வை மற்றும் பார்­வைக்கு மிக­வும் முக்­கி­யம். வேர்க்­க­ட­லை­யில் ஊட்­ட­சத்து ஈ இருப்­ப­தால், கண்­புரை உரு­வா­வ­தை­யும் வயது தொடர்­பான தசை சுருக்­கத்தையும் குறைக்­கிறது.

8. நீரி­ழிவு நோயா­ளி­க­ளுக்கு ஏற்­றது: வேர்க்­க­ட­லை­யில் சர்க்­கரை இல்­லா­த­தால் நீரி­ழிவு நோயா­ளி­க­ளுக்கு ஏற்ற உண­வா­கக் கரு­தப் படு­கிறது.

விளைவுகள்

அதிகமாக வேர்க்கடலை சாப்பிடுவதால் செரிமானப் பிரச் சினைகள் ஏற்படலாம். சிலருக்கு வேர்க்கடலை ஒத்துக்கொள்ளாது. தொண்டை எரிச்சல், மூக்கு ஒழுகு தல், தோல் அரிப்பு போன்றவை ஒவ்வாமைக்கு அறிகுறிகளாகும். சில சமயங்களில் யூரிக் அமிலம் அதிகமாகிவிடும். அப்போது வேர்க் கடலை சாப்பிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.