உலகம் முழுவதும் வேர்க்கடலை பிரபலம். வேர்க்கடலை பற்றி அறிந்திராதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். வறுக்கப்பட்ட மொறுமொறுப்பான வேர்க்கடலையை வாயில் போட்டால் மென்றுகொண்டே இருக்கலாம். ஒரு பக்கம் வேர்க்கடலையை நொறுக்கிக் கொண்டே வேலையும் பார்க்கலாம். வறுத்த வேர்க்கடலையைவிட அவித்த வேர்க்கடலை இன்னும் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. அதே சமயத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
வேர்க்கடலையை பல வகையில் சுவைத்து மகிழலாம்.
1. பொதுவாக வேர்க்கடலையை பச்சையாக அல்லது வறுத்து அதில் சிறிது உப்பு, மிளகுப் பொடி தூவி சாப்பிடலாம்.
2. வேக வைத்த வேர்க்கடலையை சாலட்டில் சேர்த்து சாப்பிடலாம்.
3. கையளவு வேர்க்கடலையை காலை உணவின்போது சீரியலில் (Cereal) சேர்த்து சாப்பிட்டால் சுவை மேலும் கூடும்.
4. சிறிய துண்டுகளாக வெட்டப்பட்ட வேர்க்கடலையை கெட்டித் தயிரில் சேர்த்து உண்டால் நடுநடுவே நறுக்கென்று இருக்கும்.
5. வேர்க்கடலையை மாற்று வழிகளிலும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். வேர்க்கடலை எண்ணெய் (கடலை எண்ணெய்) உணவுக்கு ருசியைச் சேர்க்கும்.
1. உடல் எடையைக் குறைக்க உதவுகிறது: ஒவ்வொரு நாளும் மிதமான அளவு வேர்க்கடலையை உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவும். இதில் கேலரி அதிகம் இருந்தாலும் அவை அனைத்தும் நல்ல கொழுப்பு.
2. இதய ஆரோக்கியத்துக்கு உதவும்: வேர்க்கடலை உட்கொள்வது இதயம் தொடர்பான நோய் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆரோக்கியமான இதயத்துக்குத் தேவையான ஊட்டச்சத்து வேர்க் கடலையில் உள்ளது. கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க உதவும் நார்ச்சத்தும் இதில் உள்ளது. வேர்க்கடலையில் 'ஆன்டிஆக்ஸிடன்ட்கள்' மற்றும் 'அமினோ' அமிலங்கள் உள்ளன.
அவை ரத்த நாளத்தின் உட் புறத்தை பாதுகாப்பாக வைத்திருக்கின்றன, இதனால் ரத்தநாளத்தின் தடிப்பு போன்ற இதயப் பிரச்சனைகளுக்கு எதிராக உங்கள் இதயத்தைப் பாதுகாக்கிறது.
மேலும், நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வின்படி, இந்த மொறுமொறுப்பான வேர்க்கடலைகள் இதய நோயால் இறக்கும் அபாயத்தைக் குறைக்கிறது.
3. சருமத்துக்கு நல்லது: வேர்க் கடலையில் உள்ள ஊட்டச்சத்து 'ஈ', ஊட்டச்சத்து 'சி' ஆகியவை சூரியனின் கடுமையான புற ஊதாக் கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது என்று ஆராய்ச்சி காட்டுகிறது.
கூடுதலாக, ஊட்டச்சத்து 'சி' இருப்பது உங்கள் சருமத்திற்கு நெகிழும் தன்மையை அளிக்கிறது, இது, சருமம் பிரகாசமாகவும், மென்மையாகவும் இருக்க உதவும்.
'ஆன்டிஆக்ஸிடன்ட்', 'ரெஸ்வெராட்ரோல்' போன்றவை மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகள் உட்பட வயதான அறிகுறிகளைக் கூட தாமதப்படுத்து கிறது. இந்த 'ஆன்டிஆக்ஸிடன்ட்' 'சொரியாசிஸ்' போன்ற தோல் நோய்களுக்கு அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட சிகிச்சையாகும்.
வேர்க்கடலை. உடலில் இருந்து அனைத்து நச்சுகளையும் கழுவி வெளியேற்றவும் செய்கிறது.
4. மூளையைக் கூர்மையாக்க உதவும்: மூளையை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும், கூர்மையாகவும் வைத்திருக்க ஊட்டச்சத்து பி1, ஃபோலேட் (Folate) மற்றும் நியாசின் போன்ற ஊட்டச்சத்துகள் தேவை. தினசரி உணவில் வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளும்போது, மூளையை மிகவும் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும், கூர்மையாகவும் வைத்திருக்க உதவும். ஊட்டச்சத்து பி-1 மற்றும் நியாசின் போன்றவை மறதி நோய் பாதிப்பிலிருந்தும் காக்க உதவுகிறது. வேர்க்கடலையில் உள்ள ரெஸ்வெராட்ரோல் (Resveratrol) எனப்படும் பயோஆக்டிவ் ஆன்டிஆக்சிடன்ட் (Bioactive Antioxidant) நிறைந்துள்ளது. இது வாய்மொழி மற்றும் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்துகிறது. மேலும், வேர்க்கடலையில் உள்ள பாலிபினால்ஸ் (Polyphenols) அறிவாற்றல் மற்றும் மனநல கோளாறுகளுக்கு எதிராக உதவுகிறது, இது, மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
5. புரதம் நிறைந்த வேர்க்கடலை: குழந்தைகளின் சரியான மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையான புரதத்தின் தேவையை தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதன் மூலம் பூர்த்தி செய்யலாம். வேர்க்கடலையில் புரதம் நிறைந்துள்ளது, போதுமான புரதம் உட்கொள்வதால் எந்த காயத்தையும் குணப்படுத்த உதவுகிறது.
6. எலும்புகளை வலுவாக்கு கிறது. வயது ஆக ஆக உடலில் இருக்கும் பல எலும்புகள் பலவீனமடைகின்றன. இதனால் சுறுசுறுப்பு மற்றும் வலிமை குறைகிறது. வேர்க்கடலையில் உள்ள ஊட்டச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய புரதச்சத்து எலும்புகளின் வலிமையைப் பராமரிக்க உதவுகிறது.
7. பார்வையை மேம்படுத்த உதவும்: கண் ஆரோக்கியத்துக்கு சில பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் வேர்க்கடலை சிறந்த உணவுப் பொருள்களாகக் கருதப்படுகிறது. வேர்க்கடலையில் உள்ள துத்தநாகம் ஊட்டச்சத்து Aஐ மாற்ற உதவுகிறது,
இது தெளிவான மற்றும் ஆரோக்கியமான கண்பார்வை மற்றும் பார்வைக்கு மிகவும் முக்கியம். வேர்க்கடலையில் ஊட்டசத்து ஈ இருப்பதால், கண்புரை உருவாவதையும் வயது தொடர்பான தசை சுருக்கத்தையும் குறைக்கிறது.
8. நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது: வேர்க்கடலையில் சர்க்கரை இல்லாததால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவாகக் கருதப் படுகிறது.
விளைவுகள்
அதிகமாக வேர்க்கடலை சாப்பிடுவதால் செரிமானப் பிரச் சினைகள் ஏற்படலாம். சிலருக்கு வேர்க்கடலை ஒத்துக்கொள்ளாது. தொண்டை எரிச்சல், மூக்கு ஒழுகு தல், தோல் அரிப்பு போன்றவை ஒவ்வாமைக்கு அறிகுறிகளாகும். சில சமயங்களில் யூரிக் அமிலம் அதிகமாகிவிடும். அப்போது வேர்க் கடலை சாப்பிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

