பழைய பொருள்களுக்குப் புத்துயிர் அளிப்போம்

பழைய பொருள்களுக்குப் புத்துயிர் அளிப்போம்

6 mins read
ac8d81b1-5ab9-4612-8f2b-9da86af32637
படங்கள்: தேசிய சுற்றுப்புற ஆணையம், ஃபேஸ்புக், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

மோன­லிசா

தீபா­வளி நெருங்­கிக்­கொண்­டி­ருக்­கும் வேளை­யில் இப்­போதே வீட்டை சுத்­தம் செய்ய தொடங்­கி­யி­ருப்­போம் நம்­மில் பெரும்­பா­லா­னோர்.

இரண்டு ஆண்­டு­க­ளுக்குப் பிறகு கொவிட்-19 நோய்த்­தொற்று கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்ட நிலை­யில் கோலா­க­ல­மான கொண்­டாட்­டத்­திற்கு சிங்­கப்­பூர் தயா­ராகி வரு­கிறது.

"ஒவ்­வோர் ஆண்­டும் தீபா­வ­ளிக்கு சில வாரங்­க­ளுக்கு முன்­பே வீட்­டைச் சுத்­தம் செய்­யத் தொடங்­கு­வோம்.

தேவை­யில்­லாத அதி­கம் பயன்­ப­டுத்­தப்­ப­டாத பழைய பொருள்­களை அகற்றி பிள்­ளை­க­ளுக்­கும் வீட்­டுக்­கும் தேவை­யான புதிய பொருள்­களை வாங்­கும் பட்­டி­ய­லும் தயா­ரிப்­போம்," என்று கூறி­னார் இல்­லத்­த­ர­சி­யான மீனாட்சி வசந்­த­குமார், 41.

பெரும்­பா­லும் நாம் வீட்­டை­விட்டு அகற்ற நினைக்­கும் பொருள்­கள் பழை­ய­ன­வாக இருந்­தா­லும் பயன்­படுத்­தக்கூடிய நிலை­யி­லேயே இருக்­கும்.

சில பொருள்­களை முறை­யாகப் பழுதுபார்த்­தால் பயன்­ப­டுத்­தக்­கூடும்.

அப்­ப­டிப்­பட்ட பொருள்­களை குப்­பை­யில் வீசா­மல் அடுத்­த­வர் பயன்­ப­டுத்த கொடுப்பதற்கும் அல்­லது மறு­சு­ழற்சிக்காகக் கொடுப்பதற்கும் சில பய­னுள்ள துணுக்­கு­களை கீழே காண­லாம்.

பொது நன்­கொ­டை­கள்

சால்­வே­சன் ஆர்மி

'சால்­வே­சன் ஆர்மி' எனும் தொண்டு நிறு­வ­னத்­தின் மூலம் பயன்­படுத்­தக்கூடிய நிலை­யில் உள்ள ஆடை­கள், மரச்­சா­மான்­கள், வீட்டு உப­யோ­கப் பொருள்­கள், மின்­சா­தனப் பொருள்­கள், விளை­யாட்டுச் சாமான்­கள், புத்­த­கங்­கள் ஆகி­ய­வற்றை வழங்­க­லாம்.

இணையத்தள முக­வரி : https://www.salvationarmy.org.sg/

 'பிலெஸ்­ஸிங்ஸ் இன் அ பேக்' என்­னும் நிறு­வ­னம் உணவு, புத்­த­கங்­கள், விளை­யாட்டுச் சாமான்­கள் மற்றும் வீட்டு உப­யோக சாத­னங்­கள் உள்­ளிட்ட பல பொருள்­களை தேவைப்­படும் மக்­க­ளுக்­காக சேக­ரித்து வரு­கிறது. முக­வரி : 315 Outram Road, #08-06A Tan Boon Liat Building

இணையத்தள முக­வரி : blessingsinabag.co/matchmaking-blessings

 'சிங்­கப்­பூர் ஃப்ரீசைக்­கிள் நெட்­ஒர்க்' எனும் லாப நோக்­க­மற்ற அடித்­தள அமைப்­பின் ஃபேஸ்புக் குழு­மம் மூலம் கணி­னி­கள், வீட்டு உப­யோகப் பொருள்­கள், ஆடை­கள், புத்­த­கங்­கள் என அனைத்து வித­மான பயன்­படுத்­திய பொருள்­க­ளை­யும் தேவைப்­படும் வேறு ஒரு­வ­ருக்கு கொடுக்­க­லாம்.

ஃபேஸ்புக் குழு­மம் இணையத்தள முக­வரி:

https://www.facebook.com/groups/sgfreecycle

மின்­சா­தனப் பொருள்­கள்

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கத்­தின் வீடு­களில் குடி­யி­ருப்­போர், பயன்படுத்தப்பட்ட மின்­சா­த­னப் பொருள்­களை நகர மன்­றத்­தின் மூலம் இலவசமாக வெளி­யேற்­ற­லாம். அத்துடன் தேசி­யச் சுற்­றுப்­புற அமைப்பு தீவு முழு­வ­தி­லும் 600க்­கும் மேற்­பட்ட மின்­னணுக் கழி­வு­களை சேக­ரிக்­கும் சாவ­டி­களை நிறு­வி­யுள்­ளது. இச்­சா­வ­டி­களில் கணி­னி­கள், மடிக்­க­ணி­னி­கள், கைப்­பே­சி­கள், அச்சு இயந்­தி­ரங்­கள், மின்சார பல்­பு­கள் உள்­ளிட்ட பல்­வேறு வகை­யான மின்னணுக்­ கழி­வு­களை அளிக்­க­லாம்.

புத்­த­கங்­கள்

 சிங்­கப்­பூ­ரின் தேசிய நூலக வாரி­யத்­தில் புத்­த­கங்­களை நன்­கொ­டை­யாக வழங்­க­லாம். புத்­த­கங்­கள், புகைப்­ப­டங்­கள், வரை­ப­டங்­கள், ஒலி-ஒளி வழி தக­வல் பொருள்­கள் உள்­ளிட்­டவற்றை வழங்­க­லாம். 20 புத்­த­கங்­க­ளுக்கு கீழ் வழங்க விரும்­பி­னால் கீழுள்ள இணை­யத்­தள முக­வ­ரி­யில் உள்ள இணைய படி­வத்தை நிரப்பி சமர்ப்­பிக்க வேண்­டும். இருபதுக்கும் மேற்­பட்ட புத்­த­கங்­களை வழங்க விரும்­பி­னால் நேர­டி­யாக மின்­னஞ்­சல் மூலம் புத்­த­கங்­கள் பற்­றிய விவ­ரங்­களைத் தெரி­விக்­க­லாம். இணையத்தள முக­வரி: https://www.nlb.gov.sg/main/partner-us/Donate-to-our-Collections

 'டிக்­னிட்டி மாமா' என்­பது 'ப்ரா­ஜெக்ட் டிக்­னிட்டி' என்­னும் தொண்டு நிறு­வ­னத்­தின் ஒரு திட்­ட­மா­கும். நாவல்­கள், கேலிச் சித்­திர புத்­த­கங்­கள், மாத/வார இதழ்­கள் உள்­ளிட்ட பல்­வேறு வகை­யான புத்­த­கங்­களை இங்கு நன்­கொ­டை­யாக அளிக்­க­லாம்.

இப்­புத்­தக விற்­ப­னை­ய­கங்­கள் தேசிய பல்கலைக் கழக மருத்துவமனை, கூ டெக் புவாட் மருத்துவமனை, இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனை, செங்காங் பொது மருத்துவமனை, சாங்கி பொது மருத்துவமனை ஆகிய மருத்­து­வ­மனை வளா­கங்­களில் அமைந்­துள்­ளன.

 'புக்ஸ் பியாண்ட் பார்­டர்ஸ்' எனும் சமூக நிறு­வ­னம் புனைவு மற்­றும் புனைவு-அல்­லாத பழைய ஆங்­கி­லப் புத்­த­கங்­களை சேக­ரித்து வரு­கிறது. இப்­புத்­த­கங்­க­ளின் விற்­பனையில் கிடைக்கும் வருமானம், நேப்பாளத்தில் உள்ள கிரா­மப்­புற மாண­வர்­க­ளின் கல்­விக்­காக அளிக்­கப்­ப­டு­கிறது. இருபதுக்கும் மேற்­பட்ட புத்­த­கங்­கள் இருப்­பின் இந்­நி­று­வ­னமே நேரில் வந்து புத்­த­கங்­க­ளைப் பெற்­றுக்­கொள்­ளும்.

இணையத்தள முக­வரி:

https://www.booksbeyondborders.org/

 'ஸ்கூல் காக்கி' எனும் ஃபேஸ்புக் மூலம் பழைய பள்­ளிக்­கூடப் புத்­த­கங்­கள், பள்ளிச் சீருடைகள், எழுதுபொருள்கள் போன்றவற்றை பிற­ரு­டன் இல­வ­ச­மாகப் பகிர்ந்துகொள்­ள­லாம்.

ஃபேஸ்புக் குழு­மம் இணையத்தள முக­வரி:

https://www.facebook.com/groups/schoolkaki/

டெலி­கி­ராம் குழு­மம் இணையத்தள முக­வரி: https://t.me/joinchat/GrB7yVKV9SCEbQyo6Iidqg

ஆடை­கள்

 'தி க்ரீன் ஸ்கொ­யர்' எனும் நிறு­வ­னம் பயன்­ப­டுத்­தப்­பட்ட ஆடை­களை மறு­சு­ழற்சி செய்­கிறது. சிங்­கப்­பூர் முழு­வ­தும் 15க்கும் மேற்­பட்ட நிலையங்களைக் கொண்டுள்ளது இந்நிறுவனம்.

இணையத்தள முகவரி: https://www.greensquare.com.sg/dropoff

 சிங்­கப்­பூர் மக­ளிர் அமைப்­பு­கள் மன்­றம் (Singapore Council of Women's Organisations) மூலம் பயன்­ப­டுத்­தப்­பட்ட ஆடை­கள், ஆப­ர­ணங்­கள், கால­ணி­கள், பைகள் ஆகி­ய­வற்றை வழங்­க­லாம்.

இணையத்தள முக­வரி : www.scwo.org.sg

மேலும் ஹெச்&எம், ஸாரா, யூனிக்லோ ஆகிய முன்­னணி நிறு­வ­னங்­கள் ஆடை­கள் மறு­சு­ழற்­சிக்­காக தத்­தம் நிறு­வன பழைய ஆடை­களை தங்­க­ளது விற்­ப­னைக் கிளை­களில் சேக­ரிக்­கின்­றன.

உணவு வகை­கள்

 'வில்­லிங் ஹார்ட்ஸ்' என்­னும் தொண்­டூ­ழிய குழு­மம் அன்­றா­டம் 5,000 சாப்­பா­டு­களை வய­தா­ன­வர்­க­ள், இய­லா­த­வர்­கள், ஒற்­றைப் பெற்­றோ­ரின் பிள்­ளை­க­ள், வெளிநாட்டு ஊழியர் ஆகியோருக்கு வழங்கி வரு­கிறது. மளிகைச் சாமான்­களை நன்­கொடை­யாக அளிக்க விரும்­பு­ப­வர்­கள் 11 Jalan Ubi Blk 6, #01-51, Kembangan, Chai Chee Community Hub, S409074 என்ற முக­வ­ரி­யில் அதி­காலை 4.30 மணி­மு­தல் பிற்­ப­கல் 3 மணி­வரை பொருள்­களை வழங்­க­லாம்.

 'ஃபுட் ஃப்ரம் தி ஹார்ட்' எனும் தொண்டு நிறு­வ­னம் விரை­வில் கெட்­டுப்போகாத உணவு வகை­களைத் திரட்­டு­கிறது. இணையத்தள முகவரி: https://www.foodfromtheheart.sg/

 'மெட்டா வெல்­ஃபேர் அஸோ­ஸி­யே­ஷன்' எனும் தொண்டு நிறு­வ­னம் நீண்ட நாள்­கள் கெட்­டுப்போகாத சைவ மற்­றும் ஹலால் செய்­யப்­பட்ட உண­வு வகை­களை நன்­கொ­டை­யாக பெற்­றுக்­கொள்­ளும்.

இணையத்தள முகவரி: https://www.metta.org.sg/

குழந்தை வளர்ப்புப்

பொருள்­கள்

 'பேப்ஸ்' எனும் தொண்டு நிறு­வ­னம் பேறுகாலத்­தி­லும் குழந்தை வளர்ப்­பி­லும் பயன்­ப­டுத்­தப்­பட்ட நல்ல நிலை­யில் இருக்­கும் பொருள்­களை நன்­கொ­டை­யா­கப் பெறு­கிறது. பதின்ம வய­தில் கரு­வுற்­றோர் நெருக்கடிகளைச் சமாளிக்க உத­வும் இந்­நி­று­வ­னம் குழந்தைகளுக்கான ஆடை­கள், டயப்பர்ஸ், ஸ்ட்ரோலர்ஸ் மற்றும் விளை­யாட்­டுப் பொருள்­கள், குழந்தைகளுக்கான மெத்­தை­கள் உள்­ளிட்ட பல்­வேறு பொருள்­களைச் சேக­ரிக்­கிறது.

இணையத்தள முக­வரி: babes.org.sg

 'பிலெஸ் ஃபார் மம்­மிஸ் அண்ட் பேபீஸ்' எனும் ஃபேஸ்புக் குழு­மம் மூலம் குழந்தை வளர்ப்­பில் பயன்­ப­டுத்­திய பொருள்­களை தேவைப்­படும் வேறு ஒரு­வ­ருக்கு வழங்­க­லாம். 4,500க்கும் மேற்­பட்ட உறுப்­பி­னர்­கள் இருக்­கும் இக்­கு­ழு­மத்­தில் நீங்­கள் கொடுக்க நினைக்­கும் பொரு­ளைப் பற்­றிய போஸ்ட் போடு­வ­தன் மூலம் தேவைப்­ப­டு­வோ­ருக்கு உங்­கள் பொருள்­களை வழங்க முடி­யும். ஃபேஸ்புக் குழு­மம் முக­வரி: facebook.com/groups/blessmummiesbabies

 'கிளப் ரெயின்போ' எனும் நிறு­வ­னம் பேறுகா­லத்­தி­லும் குழந்தை வளர்ப்­பி­லும் தேவைப்­படும் பொருள்­களை சேக­ரிக்­கிறது. இந்­நி­று­வ­னம் நாள்­பட்ட நோயி­னால் பாதிக்­கப்­பட்­டுள்ள குழந்­தை­க­ளுக்­கும் அவர்­க­ளின் குடும்­பத்­தா­ருக்­கும் உதவி வரு­கிறது. டயப்பர்ஸ், பால் மாவு, ஆடை­கள், விளை­யாட்டுப் பொருள்­கள் உள்­ளிட்ட பல பொருள்­களை இங்கு நன்கொ­டை­யாக வழங்­க­லாம்.

இணையத்தள முக­வரி: clubrainbow.squarespace.com

கால­ணி­கள்

கால்­க­ளுக்குப் பொருந்­தாத, அல்லது பிடிக்­காத கால­ணி­கள் குறிப்­பாக வேக­மாக வள­ரும் பிள்­ளை­க­ளின் கால்களுக்குப் பொருந்தாத கால­ணி­கள் அல­மா­ரியை நிரப்­பி­னால் அதனை கீழுள்ள நிறு­வ­னங்­களைத் தொடர்பு­கொண்டு பிற­ருக்கு வழங்­க­லாம்.

நிறு­வ­னம் : ActiveSG Circle

இணையத்­தள முக­வரி:

circle.myactivesg.com/old-shoe-new-future

நிறு­வ­னம்: Soles4Souls

முக­வரி: 705 Sims Drive, #02-12, Shun Li Industrial Complex, Singapore 387384.

இணையத்தள முக­வரி : www.soles4souls.org

நிறு­வ­னம் : Ten Feet Tall

முக­வரி : 211 Holland Avenue, #02-04, Holland Road Shopping Centre, Singapore 278967

இணையத்தள முக­வரி : www.tenfeettallshoes.com

மூக்­குக் கண்­ணா­டி­கள்

 'விசியோ ஆப்­டிக்­கல்' எனும் தனி­யார் மூக்­குக் கண்­ணாடி நிறு­வ­னம் பழைய, புதிய மூக்­குக் கண்­ணா­டி­க­ளை­யும் வெயி­லி­லி­ருந்து பாது­காக்­கும் கண்­ணா­டி­க­ளை­யும் சேக­ரிக்­கிறது. பயன்படுத்தப்படாத மூக்குக்கண்ணாடிகள் உங்களிடம் இருந்தால் அவற்றைத் தூக்கி எறிந்துவிடாமல் மற்றவர்கள் பயன்படுத்தக் கொடுங்கள்.

இக்­கண்­ணா­டி­களை வய­தா­ன­வர்­க­ளுக்­கும் தேவைப்­ப­டு­வோ­ருக்­கும் முறை­யான கண் பரி­சோ­தனை செய்த பின்­னர் இல­வ­ச­மாக வழங்கு­கிறது. கீழுள்ள முக­வ­ரிக்கு நேரிலோ அஞ்­சல் மூலமோ கண்­ணா­டி­களை அனுப்பிவைக்­க­லாம்.

முக­வரி: 43 Holland Drive 01-67, Singapore 270043

இது­போன்ற பல்­வேறு நிறு­வ­னங்­கள் சுற்­றுப்­புறச் சூழலைப் பாது­காக்­கும் நோக்­கில் சிங்­கப்­பூர் முழு­வ­தும் பல்­வேறு முயற்­சி­களில் ஈடு­பட்டு வரு­கின்­ற­ன.

இவ்­வாண்­டின் தீபா­வளிப் பண்­டி­கையை முன்­னிட்டு நாம் வீட்டை சுத்­தம் செய்­யும்­போது பழைய, பயன்­ப­டுத்­தப்­பட்ட, நல்ல நிலை­யில் இருக்­கும் பொருள்­களை முடிந்­த­வரை தேவைப்­ப­டு­வோ­ருக்கு வழங்கி அப்­பொ­ருள்­க­ளுக்கு புத்­து­யிர் வழங்க முன்வருவோம்.