சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு தொண்டூழிய தொழில் ஆலோசகர்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி ஒன்றை கடந்த வாரம் நடத்தியது.
வலுவான தொழில்முறை வலையமைப்பு, செயல்திறன் மிக்க தகவல் தொழில் திட்டமிடல் போன்றவை பற்றி எடுத்துரைக்கவும் தொழில் வளங்களை சிறந்த முறையில் அணுகுவது பற்றி எடுத்துரைக்கவும் தொழில் விருப்பங்களை மறுமதிப்பீடு செய்து புதிய பதவிகள் அல்லது துறைகளில் வேலைவாய்ப்புகளை தேடுபவர்களுக்கு வழிகாட்டவும் இந்நிகழ்ச்சி அரங்கேறியது.
தொண்டூழிய தொழில் ஆலோ சகர்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி தனிநபர்களுக்கு, குறிப்பாக 40 வயதிலிருந்து 50 வயதுடைய அனுபவ தொழிலாளர்களுக்கு, ஆதரவு மற்றும் தொழில் வழிகாட்டுதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தங்கள் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கும் பிற வேலைகளுக்கு மாறுவதற்கும் விரும்பும் நபர்களுக்கு தொழில்முறை வழி களையும் ஆலோசகர்கள் மூலம் வழிகாட்டுதலையும் இந்த முயற்சி வழங்கி வருகிறது.
கரையோரப் பூந்தோட்டம் மண்டபத்தில் நடைபெற்ற இந்
நிகழ்ச்சியில் மனிதவள அமைச்சரும் வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சருமான டாக்டர் டான் சீ லெங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
"கொவிட்-19 கிருமித்தொற்று பரவலின்போதும் துடிப்புடன் செயல்பட்ட சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு, 9 துறைகளைச் சார்ந்த 300 ஆலோசகர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளது," என்றார் அவர்.
மேலும் அவர் தமது உரையில், "2020 டிசம்பரில் அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டதிலிருந்து, சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பின் இந்தத் தொண்டூழிய தொழில் ஆலோசகர்கள் முன்முயற்சியின் ஒரு பகுதியாக, இதுவரை 3,000க்கும் மேற்பட்ட நபர்கள் தொழில் நிகழ்வுகள் மற்றும் ஆலோசனை அமர்வுகளில் பங்கேற்றுள்ளனர்.
"இந்த முயற்சியின் மூலம் வழங்கப்படும் மனிதவளத் தொடர்பு, ஊக்குவிப்பு ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது, இனிமேலும் அது தொடரும் என நான் நம்புகிறேன்" என்று டாக்டர் டான் கூறினார்.
தொண்டூழிய ஆலோசகர்
களில் ஒருவரான கே. தனலட்சுமி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக சுகாதாரத் துறையில் பணிபுரிகிறார். "மனதிற்கு நிறைவான தொழிலைக் கண்டுபிடிக்க விரும்புவர்களுக்கு உதவுவதில் எனக்கு மனநிறைவு கிடைக்கிறது," என்றார் அவர்.
செய்தி: காயத்திரி காந்தி

