ஜோயாலுக்காஸ் நகைக்கடை, வாடிக்கையாளர்களுக்கு இந்த தீபாவளியை முன்னிட்டு சிறப்புச் சலுகைகள், தங்க விலைப் பாதுகாப்புத் திட்டம் ஆகியவற்றை அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் வாங்க விரும்பும் தங்க நகைகளுக்கு 10 விழுக்காடு முன்கட்டணம் செலுத்தி பதிவுசெய்தபின், நகையை வாங்கும் நாளில் தங்கத்தின் விலையில் மாற்றம் இருந்தாலும், பதிவு செய்த விலைக்கே நகைகளை வாங்கிக்கொள்ளலாம்.
இந்த மாதம் 13ஆம் தேதி முதல் சிங்கப்பூரில் உள்ள அனைத்து ஜோயாலூக்காஸ் கிளைகளிலும் $1000க்கு தங்க நகை வாங்குவோருக்கு $25 பற்றுச்சீட்டு வழங்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் $1000க்கு மேல் வைரம், முத்து, போல்கி நகைகளை வாங்கினால் $75 பற்றுச்சீட்டு வழங்கப்படுகிறது.
இந்தச் சலுகை இம்மாதம் 25ஆம் தேதி வரை நீடிக்கும் என்று கூறப்பட்டது.
செய்தி: அனுஷா செல்வமணி