சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களத்தின் காப்பிய விழா 2022 கண்ணதாசன் விருதுக்குப் பரிந்துரைகள் வரவேற்பு

சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களத்தின் காப்பிய விழா 2022 கண்ணதாசன் விருதுக்குப் பரிந்துரைகள் வரவேற்பு

2 mins read
4e369150-6418-494e-a201-8a37c56d3aea
இம்மாதம் 16ஆம் தேதி ஏழாம் ஆண்டாக காப்பிய விழா நடைபெற்றது. படம்: சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் -

சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கம் ஆண்­டு­தோ­றும் நடத்­தும் கவி­ய­ரசு கண்­ண­தா­சன் விழா­வில் அவர் பெய­ரில் விருது வழங்கி வரு­கிறது. இவ்­வாண்டு இந்த விரு­துக்­குப் பொதுமக்­க­ளின் பரிந்­து­ரை­கள் வர­வேற்­கப்­ப­டு­கின்­றன.

பரிந்­துரை செய்­வ­தற்­கான விதி­கள் வரு­மாறு:

* விரு­துக்­குப் பரிந்­து­ரைக்­கப்­ ப­டு­ப­வர் கவிதை, சிறு­கதை, நாவல், கட்­டுரை, நாட­கம், திரைக்­கதை வச­னம், பாடல், ஊட­கம் ஆகிய எட்­டுத் துறை­களில் ஏதா­வது ஒன்­றில் சிறந்த எழுத்­துத் திறன் பெற்ற­வ­ராக விளங்க வேண்­டும்.

* அவர் 1983 ஜூன் 24 அல்­லது அதற்­குப் பிறகு பிறந்­த­வ­ராக இருக்க வேண்­டும்.

* பரிந்­து­ரைப்­ப­வர், பரிந்­துரை செய்­யப்­ப­டு­ப­வர் இரு­வ­ரும் சிங்­கப்­பூர்க் குடி­யு­ரிமை பெற்றவராகவோ நிரந்­த­ர­வா­சி­யா­கவோ இருக்க வேண்­டும்.

* பரிந்­துரை செய்­யப்­ப­டு­ப­வ­ரின் தனித் திறன்­கள், அவர் எந்­தத் துறை­யில் சிறப்­புப் பெற்­றுள்­ளார் என்ற விவ­ரங்­க­ளு­டன் அவ­ரைப் பரிந்­துரை செய்­வ­தற்­கான கார­ணங்­களும் தெரி­விக்­கப்­பட வேண்­டும்.

* பரிந்­து­ரை­களை, aavanna19@gmail.com அல்­லது kiruthikavirku@gmail.com எனும் மின்­னஞ்­சல் முக­வ­ரிக்கோ BLK 723 # 13-149, Yishun St 71, Singapore 760723 எனும் முக­வ­ரிக்கோ இம்மாதம் 31ஆம் தேதிக்குள் அனுப்­ப­ வேண்­டும். தகுதி­பெ­று­ப­வ­ருக்கு, வரும் நவம்­பர் 19ஆம் தேதி நடை­பெ­றும் கவி­ய­ரசு கண்­ண­தா­சன் விழா­வில் விருது வழங்­கப்­படும்.

மேல் விவரங்களுக்கு www.singaporetamilwriters.com எனும் இணையத்தளத்தை நாடலாம்.

சிங்­கப்­பூர் தமிழ் இலக்­கி­யக் களம் இம்­மா­தம் 16ஆம் தேதி காலை ஏழாம் ஆண்டு காப்­பிய விழா­விற்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

தேசிய நூல­கத்­தில் நடந்த நிகழ்ச்­சிக்கு போப்ராஜ் எனும் நாகை தங்­க­ராசு தலை­மை­யேற்­றார். சிறப்பு விருந்­தி­ன­ராக நாடா­ளு­மன்ற முன்­னாள் நிய­மன உறுப்­பி­னர் இரா. தின­க­ரன் கலந்­து­கொண்­டார்.

திரு. ஜோதி மாணிக்­க­வா­ச­கத்­தின் வாழ்த்­துரை, திரு. கண்­ணன் சேஷாத்­ரி­யின் மகா­பா­ர­தம் குறித்த சிற்­றுரை ஆகி­யவை இடம்­பெற்ற நிகழ்ச்­சி­யில், நா. வீ. விஜ­ய­பா­ர­திக்கு இளங்­கோ­வ­டி­கள் விருது வழங்­கப்­பட்­டது.

புதுச்­சே­ரி­யி­லி­ருந்து வந்­தி­ருந்த முனை­வர் நா. இளங்கோ, மகா­பா­ர­தத்­தில் சூதும் வாதும் எனும் தலைப்­பில் சிறப்­புரை ஆற்­றி­னார்.

பெருந்­தே­வ­னார்் நல்­லாப்­பிள்ளை, வில்­லி­புத்­தூர் ஆழ்­வார் ஆகியோர் மகா­பா­ர­தத்­தைத் தமி­ழில் வழங்­கி­யதை அவர் சுட்­டி­னார்.

மகா­பா­ர­தம் மனித மனங்­க­ளின் விசித்­தி­ரங்­களை நேர்­ம­றை­யா­க­வும் எதிர்­ம­றை­யா­க­வும் பதிவு செய்­யும் காப்­பி­யம்; கதா­பாத்­தி­ரங்­க­ளின் வழியே தர்­மத்தை நிலை­நி­றுத்­து­வ­தும் பெண்­ணின் பெருமை பேசு­வ­தும் சகோ­த­ரத்­து­வத்­தின் மேன்­மையை எதிர்­ம­றை­யில் பதிவு செய்­வ­தும் அதன் தனித்­தன்­மை­கள் என்­றார் முனை­வர் நா. இளங்கோ.

முன்­ன­தாக, இந்த நிகழ்ச்­சிக்­கான நோக்க உரையை வழங்­கிய முனை­வர் ரத்­தின வெங்­க­டே­சன், காப்பிய விழா 2022ன் நிறை­வில் நன்றியுரை ஆற்றினார்.