கிரிக்கெட் தேர்வுக் குழுவில் மூன்று புதுமுகங்கள்

கிரிக்கெட் தேர்வுக் குழுவில் மூன்று புதுமுகங்கள்

1 mins read

புது­டெல்லி: இந்­திய கிரிக்­கெட் வீரர்­களைத் தேர்வு செய்­யும் தேர்வு குழு­வுக்கு முன்­னாள் வேகப்­பந்து வீரர் சேட்­டன் சர்மா தலை­வ­ராக உள்­ளார். தேபா­சிஷ் மொகந்தி, ஹர்­வீந்­தர்­சிங், சுனில் ஜோஷி ஆகி­யோர் தேர்வுக் குழு உறுப்­பி­னர்­க­ளாக உள்­ள­னர்.

மேற்கு மண்­டலத் தேர்­வா­ளர் அபய் குரு­வில்லா கடந்த பிப்­ர­வரி மாதம் வெளி­யே­றி­னார். அவ­ரது இடம் இன்­னும் நிரப்­பப்­ப­டா­மல் உள்­ளது.

இந்நிலையில் தேர்வுக்குழுவில் சில மாற்றங்களைச் செய்ய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்­பாக அந்த வாரியத்தின் செய­லா­ளர் ஜெய்ஷா கூறும்போது, "கிரிக்­கெட் ஆலோ­சனைக் குழுவை (சி.ஏ.சி.) நாங்­கள் விரை­வில் அமைப்­போம். அதன் நடை­மு­றையைப் பின்­பற்றி புதிய தேர்வுக் குழுவை நிய­மிப்­போம்," என்­றார். தென்­மண்­டலத் தேர்­வா­ளர் சுனில் ஜோஷி, மத்­திய மண்­டல தேர்­வா­ளர் ஹர்­வீந்­தர் சிங் ஆகி­யோர் வெளி­யேறுகின்றனர். அவர்­க­ளுக்குப் பதி­லாக புதிய தேர்வுக் குழு உறுப்­பி­னர்­கள் டிசம்­பர் மாதத்­திற்­குள் தேர்வு செய்­யப்­ப­டு­வார்­கள். சேட்­டன் சர்மா தலை­மை­யில் ஐவர் கொண்ட தேர்வுக் குழு கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்­பர் மாதம் நிய­மிக்­கப்­பட்­டது.

இதில் வெளியேறும் மூன்று பேருக்குப் பதி­லாக மூன்று புது­முகங்­கள் நிய­மிக்­கப்­ப­டு­கி­றார்­கள்.

தேர்வுக் குழுத் தலை­வர் சேட்­டன் சர்மா, தேபா­சிஷ் மொகந்தி ஆகி­யோர் மட்­டுமே நீடிப்­பார்­கள். 20 ஓவர் போட்­டி­கள் தான் தற்­போது ஆதிக்­கம் செலுத்தி வரு­கிறது. இத­னால் இந்தப் போட்டி குறித்து நன்கு அறிந்­த­வர்­கள் தான் தேர்­வா­ளர்­க­ளாக நிய­மிக்­கப்­ப­டு­வார்­கள் என்று தெரி­கிறது.