வெளிநாட்டு ஊழியர்களின் தீபாவளிக் கோலாகலம்

தீபா­வ­ளிக் குதூ­க­லத்தை வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளு­டன் பகிர்ந்­து­கொள்ள நேற்று முன்­தி­னம் நிகழ்ச்சி ஒன்­றுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டது. இந்­நி­கழ்ச்­சி­யில் சுமார் 2,000 வெளி­நாட்டு ஊழி­யர்­கள் கலந்­து­கொண்டு ரங்­கோலி இடு­வது, நடன அங்­கம், விளை­யாட்­டுப் போட்­டி­கள் போன்­ற­வற்­றில் பங்­கெடுத்­த­னர். ஜூரோங் ஈஸ்ட்­டில் உள்ள பெஞ்­சுரு பொழு­து­போக்கு நிலை­யத்­தில் இந்த நிகழ்ச்சி நடந்­தது.

மனி­த­வள அமைச்­சின் உத்­த­ர­வாத, பரா­ம­ரிப்பு, ஈடு­ப­டுத்­தல் குழு, கார்­னர்ஸ்­டோன் சமூ­கச் சேவை அமைப்பு, 'மை பிர­தர் எஸ்ஜி' குழு ஆகி­யவை இணைந்து இந்த நிகழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தன. மனி­த­வள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்­மது நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­டார்.

நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­ட­வர்­கள் ரங்­கோலி கோலங்­கள் வரைந்­த­னர். மிகப்­பெ­ரிய ரங்­கோ­லியை வரைந்து கின்­னஸ் சாதனை படைத்த ரங்­கோலி கலை­ஞர் விஜயா மோகன் ஊழி­யர்­க­ளுக்கு வழி­காட்­டி­னார். ரங்­கோலி வரை­யும் போட்­டி­யில் வெற்­றி­பெற்ற மூவ­ருக்கு பற்­றுச்­சீட்­டு­களும் மற்ற பல பரிசுப் பொருள்­களும் வழங்­கப்­பட்­டன.

நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்ட அனை­வ­ருக்­கும் தீபா­வளி தின்­பண்­டங்­கள், கைக்­க­டி­கா­ரங்­கள் போன்ற பொருள்­கள் அடங்­கிய அன்­ப­ளிப்புப் பைகள் கொடுக்­கப்­பட்­டன.

ஈராண்டுகளாக நீடித்த கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளுக்­குப் பின்­னர், தீபா­வ­ளி­யைக் கொண்­டாட இந்த ­நிகழ்ச்சி ஒரு நல்ல வாய்ப்­பாக இருந்­த­தாக நிகழ்ச்­சியை இணைந்து நடத்­திய 'மை பிர­தர்­எஸ்ஜி' அமைப்­பின் நிறு­வ­னர் தம் வாய் ஜியா குறிப்­பிட்­டார்.

மேலும், வெளி­நாட்டு ஊழி­யர்­கள் சிங்­கப்­பூ­ரர்­க­ளு­டன் ஒன்­றி­ணைய இந்த நிகழ்ச்சி உதவி­ய­தா­க­வும் அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!