தேசிய கல்விக் கழகத்தில் கொண்டாட்டம்

தேசிய கல்விக் கழகத்தில் கொண்டாட்டம்

2 mins read
682bb98b-a88c-4fbb-b67a-db28fb48366c
பேராசிரியர் எடி சோங் (வலமிருந்து 2வது) மங்கல இசை முழங்க தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்வுக்கு அழைத்து வரப்படுகிறார். செய்தி, படம்: தேசிய கல்விக் கழகம் -

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்கலைக்­க­ழ­கத்­தின் (என்­டியு) தேசிய கல்விக் கழக ஆசி­ய­மொ­ழி­கள், பண்­பா­டு­கள் துறை­யின்­கீழ் இயங்கும் தமிழ்­மொழி, பண்­பாட்டுத்­துறை, நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத் தமிழ்­மொழி மன்­றம், தேசிய கல்­விக் கழ­கத் தமிழ்­மொழி மன்­றம் ஆகி­ய­வற்­று­டன் இணைந்து கடந்த வாரம் புதன்­கி­ழமை 'பர­வ­சத் தீபா­வளி' என்­னும் தலைப்­பில் தீபா­வளிக் கொண்­டாட்­டத்­துக்கு ஏற்­பாடு செய்­தது.

கொவிட்-19 கார­ண­மாக கடந்த ஈராண்­டு­க­ளாக மெய்­நி­கர் வழி நடை­பெற்று வந்­தது தீபா­வளி நிகழ்வு. தற்­போது கட்­டுப்­பா­டு­கள் தளர்ந்­துள்­ள­தால், இவ்­வாண்டு தீபா­வ­ளிக் கொண்­டாட்­டம் நேரடி நிகழ்­வாக நடை­பெற்­றது.

நிகழ்ச்­சி­யில் சிறப்பு விருந்­தி­ன­ராக ஆசி­ரி­யர் கல்வி அலு­வ­ல­கத்­தில் பயிற்சி வகுப்­புத் திட்­டங்­களுக்­கான திட்­ட­மி­ட­லுக்­கும் நிர்­வா­கத்­திற்­கு­மான இணைப் புல முதன்­மை­ய­ரும் பார்­வை­வழி மற்றும் நிகழ்த்­துக் கலை­கள் துறை­யின் இணைப் பேரா­சி­ரி­ய­ரு­மான எடி சோங் குவாங் மெய் பங்­கேற்­றார்.

தேசி­ய கல்­விக்­ கழக, நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்கலைக்­க­ழ­கப் புலத் தலைவர்கள், பல்­வேறு கல்வி­யி­யல் துறை­களைச் சேர்ந்த பேரா­சி­ரி­யர்­கள், விரி­வுரை­யா­ளர்­கள், கல்வி­யாளர்கள், அலு­வலக அதி­கா­ரி­கள், மாணவ ஆசி­ரி­யர்­கள் போன்­றோரும் இந்­நி­கழ்­வில் கலந்து­கொண்­ட­னர்.

தமி­ழ­ரின் பாரம்­ப­ரிய உடை அணிந்து வந்­தார் இணைப் பேரா­சி­ரி­யர் எடி சோங். சிறப்பு விருந்­தி­னரும் முக்­கிய விருந்­தி­னர்­களும் மத்­தாப்­பு­க­ளைக் கொளுத்­தித் தீபா­வ­ளிக் கொண்­டாட்ட உணர்­வில் திளைத்­த­னர். அதன் பின்னர், பாரம்­ப­ரிய முறை­யில் குத்­து­வி­ளக்­கேற்­றப்­பட்டு நிகழ்வு தொடங்­கி­யது.

லிட்­டில் இந்­தி­யா­வில் தங்­கி­ இ­ருந்ததை நினை­வு­கூர்ந்த இணைப் பேரா­சி­ரி­யர் எடி சோங், இடி­யாப்­பம், வெங்­காய ஊத்­தப்­பம், மசாலா தோசை போன்ற தமிழ் உண­வு­களை இன்­றும் உண்டு வரு­வ­தாக குறிப்­பிட்டு, தமி­ழர் பாரம்­ப­ரி­யத்­தோடு தமக்­கி­ருக்­கும் நெருக்­கத்தை வெளிப்­ப­டுத்­தி­னார்.

தீபா­வ­ளிக் கொண்­டாட்­டத்­தின் ஓர் அங்­க­மா­கக் கலை­நி­கழ்ச்­சி­கள் அரங்­கே­றின. பட்­டப் படிப்­புக்­குப் பிந்­திய பட்­ட­யக்­கல்வி பயி­லும் மாணவி பிரி­ய­தர்­ஷினி பாடல் ஒன்­றைப் பாடி பார்­வை­யா­ளர்­களை மகிழ்­வித்­தார். இளங்­க­லைப் பட்டக்­கல்வி பயி­லும் ஷ்ரு­திகா, நந்தினி இரு­வ­ரின் நடன அங்­கம் இடம்­பெற்­றது. அத­னை­ய­டுத்து, பட்­ட­யக்­கல்வி பயி­லும் மாணவி ரோஷி­னி­யின் படைப்­பாக்­கத்­தில் தமி­ழர் பண்­பாட்­டுப் பழக்­க­வ­ழக்­கங்­களை எடுத்­து­ரைக்­கும் நாடக அங்­கம் இடம்­பெற்­றது.

தமி­ழர் பாரம்­ப­ரிய உடை­அணிந்து வந்­த­வர்­க­ளைக் கௌர­விக்­கும் வகை­யில் பரி­சு­கள் வழங்­கப்­பட்­டன.