பார்சிலோனாவிற்குத் தொடர் ஏமாற்றம்

பார்சிலோனாவிற்குத் தொடர் ஏமாற்றம்

1 mins read
8b405383-41e6-42d5-bbf1-12aa304f5d1d
பயர்ன் மியூனிக்கின் சாடியோ மானேயுடன் (வலது) போட்டியிடும் பார்சிலோனாவின் ஹெக்டர் பெலரின். படம்: ஏஎஃப்பி -

பார்­சி­லோனா: ஐரோப்­பி­யக் காற்­பந்­தில் கொடி­கட்­டிப் பறந்த ஸ்பெ­யினின் பார்­சி­லோனா குழு, இப்­போது அடுத்­த­டுத்த இரண்டு யூயேஃபா சாம்­பி­யன்ஸ் லீக் போட்­டி­களில் இரண்­டாம் சுற்­றுக்கு முன்­னே­றத் தவ­றி­யுள்­ளது. அதோடு, தொடர்ந்து இரண்­டா­வது முறை­யாக பார்­சி­லோ­னா­வின் தலை­யெ­ழுத்தை மாற்­றி­யுள்­ளது ஜெர்­ம­னி­யின் பயர்ன் மியூ­னிக்.

நேற்று முன்­தி­னம் பின்­னி­ரவு நடை­பெற்ற 'சி' பிரிவு ஆட்­டத்­தில் பார்­சி­லோனா தனது சொந்த மண்­ணில் பயர்­னி­டம் 3-0 எனும் கோல் கணக்­கில் படு­தோல்வி அடைந்­தது. இப்­பி­ரி­வில் இது­வரை ஆடிய ஐந்து ஆட்­டங்­களில் ஒன்றை மட்­டுமே வென்­றுள்­ளது பார்­சி­லோனா.

இந்த ஆட்­டம் இடம்­பெ­று­வ­தற்கு முன்­னரே பார்­சி­லோனா அடுத்த சுற்­றுக்கு முன்­னேறு­வ­தற்­கான வாய்ப்­பு­கள் குறை­வா­கத்­தான் இருந்­தன. இந்­தத் தோல்வி அதை உறு­திப்­ப­டுத்­தி­யது.

மீண்­டும் மற்ற குழுக்­களை அச்­சுறுத்­தும் ஒன்றாக உரு­வெ­டுக்­கும் பார்சிலோனாவின் முயற்­சி­களில் பின்­னடைவுகள் ஏற்­பட்­டுக்­கொண்டே இருக்­கின்றன.

இப்பிரி­வில் பயர்ன் முத­லி­டத்­தில் முடிப்­பது உறு­தி­. ஒவ்­வொரு பரு­வ­மும் சாம்­பி­யன்ஸ் லீக்­கின் முதல் சுற்­றில் இதர குழுக்­களை ஊதித் தள்­ளு­கிறது பயர்ன்.

இத்­தா­லி­யின் இன்­டர் மிலான் 'சி' பிரிவில் இரண்­டாம் இடத்­தில் முடிப்­பதும் உறு­தி­யா­கி­விட்­டது. ஒரு பிரிவில் முதல் இரு இடங்­களில் முடிக்­கும் குழுக்­கள் இரண்­டாம் சுற்றுக்கு முன்­னே­றும்.

யூயேஃபா சாம்பியன்ஸ் லீக்: மீண்டும் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறத் தவறியது பார்சிலோனா