சிங்கப்பூருக்கும் மியன்மாருக்கும் இடையிலான ஆசியான் காற்பந்துச் சம்மேளனக் (ஏஎஃப்எஃப்) காற்பந்துப் போட்டி டிசம்பர் 24ஆம் தேதியன்று ஜாலான் புசார் விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது.
ஆட்டம் தேசிய விளையாட்டரங்கில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், டிசம்பர் 17, 18ஆம் தேதிகளில் அங்கு தைவானியப் பாடகர் ஜே சுவோவின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதால் திடலைத் தயார்படுத்தப் போதுமான நேரம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

