மண்ணைக் கவ்விய அட்லெட்டிக்கோ மட்ரிட்

மண்ணைக் கவ்விய அட்லெட்டிக்கோ மட்ரிட்

1 mins read

மட்­ரிட்: ஸ்பெ­யி­னின் மற்­றொரு குழு­வான அட்­லெட்­டிக்கோ மட்­ரிட்­டும் யூயேஃபா சாம்பியன்ஸ் லீக் இரண்­டாம் சுற்­றுக்கு முன்­னே­றத் தவ­றி­யது.

'பி' பிரி­வில் ஜெர்­ம­னி­யின் பயர் லெவர்க்­கு­ச­னு­டன் 2-2 எனும் கோல் கணக்­கில் சம­நிலை கண்ட அட்­லெட்­டிக்கோ, இனி அப்­பி­ரி­வில் முதல் இரு இடங்­க­ளுக்­குள் முடிக்­க­ மு­டி­யாது. இது­வரை ஆடிய ஐந்து ஆட்­டங்­களில் ஒன்­றில் மட்­டுமே அது வென்­றுள்­ளது. இதைத் தொடர்ந்து, ஸ்பெ­யி­னின் ஆகப் பெரிய மூன்று குழுக்­களில் இரண்டு அடுத்த சுற்­றில் இடம்­பெறாது.

'ஏ' பிரி­வில் எதிர்­பார்ப்­பு­களை நொறுக்கி முதலிடம் வகித்து அசத்துகிறது இத்­தா­லி­யின் நெப்போலி. ஏற்­கெ­னவே அடுத்த சுற்­றுக்கு முன்­னே­றிய அது, ஸ்காட்­லாந்­தின் ரேஞ்­சர்ஸ் குழவை 3-0 எனும் கோல் கணக்­கில் வீழ்த்­தி­யது.

இத்­தா­லிய லீக் பட்­டி­ய­லி­லும் முத­லி­டம் வகிக்கும் நெப்போலியிடம் 80களுக்­குப் பிறகு மீண்­டும் புத்­து­யிர் பெற்ற உணர்வு இப்போது தெரி­கிறது.