லிவர்பூல் முன்னேற்றம், டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் தடுமாற்றம்

லிவர்பூல் முன்னேற்றம், டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் தடுமாற்றம்

1 mins read

ஆம்ஸ்­டர்­டான்: இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் குழு­வான லிவர்­பூல் அடுத்த சுற்­றுக்கு முன்­னே­றி­யுள்­ளது.

'ஏ' பிரி­வில் நெதர்­லாந்­தின் ஆயெக்ஸ் ஆம்ஸ்­டர்­டாமை 3-0 எனும் கோல் கணக்­கில் அது வென்­றது. கடந்த ஐந்து சாம்­பி­யன்ஸ் லீக் போட்­டி­களில் மூன்­றில் இறு­தி­யாட்­டத்­திற்கு முன்­னேறி ஒரு­முறை கிண்­ணத்தை வென்றது லிவர்­பூல்.

'டி' பிரி­வில் முத­லி­டத்தை வகித்­தா­லும் இரண்­டாம் சுற்­றுக்கு முன்­னே­றும் வாய்ப்பை இழக்­கும் அபா­யத்­தில் உள்­ளது, ேபார்ச்­சு­க­லின் ஸ்போர்ட்­டிங் சிபி­யு­டன் 1-1 எனும் கோல் கணக்­கில் சம­நிலை கண்ட மற்­றொரு பிரி­மி­யர் லீக் குழு­வான டோட்­டன்­ஹம் ஹாட்ஸ்­பர். பிரி­மி­யர் லீக், சாம்­பி­யன்ஸ் லீக் இரண்­டி­லும் ஸ்பர்ஸ் சரிவை எதிர்­கொள்­கிறது.