லண்டன்: மான்செஸ்டர் சிட்டிக்கு எதிரான இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டத்திலிருந்து நீக்கப்பட்டதற்கு லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப் ஆட்டங்களிலிருந்து தற்காலிகமாகத் தடைசெய்யப்படவில்லை. எனினும், அவருக்கு 30,000 பவுண்ட் (49,000 வெள்ளி) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு சிட்டிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நடுவர் ஆண்டனி டேலரை ஆத்திரத்துடன் அணுகிய கிளோப், சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு நீக்கப்பட்டார். அவரின் செயலுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்பது குறித்து இங்கிலாந்துக் காற்பந்துச் சங்கம் ஆலோசித்தது.
அதைத் தொடர்ந்து கிளோப்பிற்கு சிலர் அஞ்சிய அளவிற்கு மோசமான தண்டனை விதிக்கப்படவில்லை.
விறுவிறுப்பான அந்த ஆட்டத்தில் லிவர்பூல் வென்றது.

