மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் பொழிந்த தொடர் மழையால் அந்நகரில் நேற்று நடைபெறவிருந்த இரண்டு ஆண்கள் டி20 உலகக் கிண்ண ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. 'சூப்பர்-12' சுற்று முதல் பிரிவில் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் மோதவிருந்த ஆட்டம் அவற்றில் ஒன்று.
இரு அணிகளும் இப்பிரிவில் இதுவரை ஓர் ஆட்டத்தில் வென்று மற்றொன்றில் தோல்வியடைந்துள்ளன.
இதே பிரிவில் ஆப்கானிஸ்தானும் அயர்லாந்தும் சந்திக்கவிருந்த ஆட்டமும் முன்னதாக ரத்து செய்யப்பட்டது. அதனால் இந்த நான்கு குழுக்களுக்கும் ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
இப்பிரிவில் இதுவரை ஆப்கானிஸ்தான் ஆடவிருந்த இரண்டு ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில நாள்களுக்கு முன்பு அதற்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான ஆட்டமும் ரத்தானது.
'சூப்பர்-12' சுற்று முதல் பிரிவில் முதலிடம் வகிக்கிறது நியூசிலாந்து.

