'தூய நீர் ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை'

'தூய நீர் ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை'

1 mins read
c7d56acd-6879-4d1b-9a56-96c3c15d41fe
-

மோனலிசா

சிங்­கப்­பூர் அனைத்­து­லக அற­நி­று­வ­னம் (எஸ்­ஐ­எஃப்) கம்­போ­டியா நாட்டு கிரா­மப்­பு­றங்­க­ளுக்கு சுத்­த­மான ­நீர் வழங்­கும் முயற்­சி­யில் கடந்த 20 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக ஈடு­பட்டு வரு­கிறது.

இதற்கான 'வாட்­டர் பாஃர் லைஃப்' எனும் திட்­டத்­தின் மூன்­றா­வது கட்­டம் அண்மையில் சியாம் ரீப் மாகாண கிரா­மப்­பு­றங்­களுக்­கா­கத் தொடங்­கப்பட்டது.

பத்து ஆண்­டு­க­ளாக இத்­திட்­டத்­தின் தொண்­டூ­ழி­ய­ரான செல்­வ­சுந்­த­ரம் நாக­லிங்­கம் (படம்), சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யின் ஓய்வு பெற்ற மாஸ்­டர் வாரண்ட் அதி­காரி.

"சுத்­த­மான தண்­ணீர் ஒவ்­வொரு மனி­த­னின் அடிப்­படை உரிமை. அதை வழங்­கு­வ­தற்­கான இம்­முயற்­சி­யால் கம்­போ­டிய மக்­க­ளின் வாழ்க்­கை­முறை மேம்­பட்­டுள்­ளது. தொண்­டூ­ழி­யத்­தில் தொடர்ந்து ஈடு­பட இது எனக்கு உந்­து­சக்­தி­யாக அமை­கிறது," என்­றார் இவர்.

இது­வரை 20 முறை கம்­போ­டியா சென்­றுள்ள சுந்­த­ரம், கம்­போ­டி­யர்­க­ளு­டன் மிக நெருக்­க­மான உறவை வளர்த்­துள்­ளார். மொழி­பெ­யர்ப்­பா­ளர்­கள், ஓட்­டு­நர்­கள் என உள்­ளூர் சமூ­கத்­து­ட­னான இவ­ரது தொடர்பு அவர்­களை ஒன்­றி­ணைத்து ஆக்­க­க­ர­மான மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தப் பெரி­தும் உத­வு­கிறது.

கிராம மக்­களில் பலர் இவ­ரைத் தங்கள் உற­வி­ன­ரா­கவே நினைத்துப் பழகுகின்றனர். சிங்­கப்­பூரை ஒரு பணக்­கார நாடாக மட்­டுமே பார்த்த இம்­மக்­கள் தற்­போது சிங்­கப்­பூ­ரர்­களின் நற்­கு­ணத்தை இனம்­கண்­டு உள்­ள­தாக இவர் கூறி­னார்.