மக்கள் தொண்டில் மனநிறைவு உண்டு

மக்கள் தொண்டில் மனநிறைவு உண்டு

2 mins read

பொதுச் சுகா­தார ஆராய்ச்­சி­யா­ள­ரான 34 வயது ஆயிஷா பர்­வின், எஸ்­ஐ­எஃப் தொண்­டூ­ழி­யர்­களில் ஒரு­வர்.

தன்­னு­டைய தொண்­டூ­ழிய அனு­ப­வம் பற்­றி பகிர்­கை­யில், "எந்த ஒரு சமூ­கத்­தின் நல்­வாழ்­வுக்­கும் அடிப்­படை அதன் ஆரோக்­கி­யமே. அவ்­வ­கை­யில் சுத்­த­மான தண்­ணீர் கிடைக்­கா­மல் பாதிக்­கப்­பட்­டுள்ள கம்­போ­டிய மக்­க­ளுக்­கான இந்­நற்­ப­ணி­யில் இணைந்­தி­ருப்­பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்­கிறது,"என்­றார் இவர்.

2014ஆம் ஆண்டு முதல் இத்­திட்­டத்­தின்­கீழ் தொண்­டூ­ழி­யம் செய்­து­வ­ரும் இவர் இது­வரை மூன்­று­முறை கம்­போ­டியா சென்­றுள்­ளார்.

"நான் சென்­ற­முறை வந்­தி­ருந்­த­போது சந்­தித்த மக்­கள் இம்­முறை என்னை நினை­வு­கூர்ந்­தது நெகிழ்ச்­சி­யாக இருந்­தது. சென்ற முறை நாங்­கள் நுண்­ணு­யிரி-மணல் நீர் வடி­கட்டி நிறு­விய குடும்­பங்­க­ளுக்கு மீண்­டும் சென்­ற­போது அந்த வடி­கட்­டி­கள் அவர்­கள் வாழ்­வில் ஏற்­ப­டுத்­தி­யுள்ள ஆரோக்­கிய மேம்­பாடு மிகுந்த மன­நி­றைவை அளித்­தது," என்­றார் ஆயிஷா.

சக தொண்­டூ­ழி­யர்­க­ளு­டன் பழ­கும் வாய்ப்­பா­க­வும் சொந்த வாழ்­வில் தான் அனு­ப­விக்­கும் வசதி வாய்ப்­பு­களை நன்­றி­யு­டன் அணு­க­வும் நிறை­வான மனத்­து­டன் வாழ­வும் இத்­தொண்­டூ­ழி­யம் வாய்ப்­பாக அமைந்­தது என்­கி­றார் இவர்.

கடந்த ஒன்­பது ஆண்­டு­க­ளாக எஸ்­ஐ­எஃப் நிறு­வ­னத்­து­டன் இணைந்து தொண்­டூ­ழி­யம் செய்து வரு­கி­றார் 41 வய­தான அஸ்­லினா அகமது. மூன்று குழந்­தை­க­ளுக்­குத் தாயான இவர், குழந்­தை­களை விட்­டுச் செல்­வது கடி­ன­மாக இருந்­தா­லும் தன் பிள்­ளை­கள் வய­தில் உள்ள பிற பிள்­ளை­க­ளுக்கு உத­வும் முயற்­சி­யில் ஈடு­ப­டு­வது ஊக்­கம் அளிப்­ப­தா­கக் கூறி­னார்.

"வெளி­நா­டு­களில் தொண்­டூ­ழி­யம் செய்­யும்­போது அவர்­க­ளது வாழ்க்கை நிலை, மன­நிலை, பொரு­ளா­தா­ரச் சூழல் போன்­ற­வற்றை நேர­டி­யா­கத் தெரிந்­து­கொள்ள இய­லும்.

இந்த அ­னு­ப­வம் வாழ்க்­கை­மீது ஒரு பக்­கு­வப்­பட்ட நிலை­யான பார்­வையை அளிக்­கும். கூடு­த­லான சிங்­கப்­பூர் இளை­யர்­கள் இத்­த­கைய தொண்­டூ­ழி­யத்­தில் ஈடு­பட வேண்­டும்," என்று வலி­யு­றுத்­திய இவர், "என் பிள்­ளை­க­ளை­யும் இவ்­வாறு ஊக்­கு­விப்­பேன்," என்­றார்.