74,000க்கு மேலானோர் பலனடைந்துள்ளனர்

74,000க்கு மேலானோர் பலனடைந்துள்ளனர்

1 mins read
aff07358-78f8-4ef4-bf07-93e5d31105cc
எஸ்ஐஎஃப் அறநிறுவனத் தொண்டூழியர்கள் கம்போடிய கிராமப்புற வீடுகளில் நிறுவுவதற்கான நுண்ணுயிரி-மணல் நீர் வடிகட்டிக்கான சிமெண்ட் தொட்டிகளை உருவாக்கிக் கொண்டுள்ளனர். -

எஸ்­ஐ­எஃப், 2010ஆம் ஆண்டு முதல் 'வாட்­டர் பாஃர் கம்­போ­டியா' எனும் அறக்­கட்­ட­ளை­யு­டன் இணைந்து 'வாட்­டர் பாஃர் லைஃப்' திட்­டத்­தைச் செயல்­ப­டுத்­தி­வ­ரு­கிறது.

இத்­திட்­டத்­தின்­கீழ், நுண்­ணு­யிரி-மணல் நீர் வடி­கட்­டி­க­ளைப் பயன்­ப­டுத்தி பாது­காப்­பான குடி­நீர் வழங்­கப்­ப­டு­கிறது.

நீர் மூலம் பர­வும் நோய்­க­ளைக் குறைத்­தல், சுகா­தார நடை­மு­றை­க­ளின்­வழி ஆரோக்­கி­யத்தை மேம்­ப­டுத்­து­தல், அடிப்­ப­டைச் சுகா­தா­ரக் கல்வி உள்­ளிட்ட, வாழ்க்­கைத் தரத்தை உயர்த்­தும் நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

இத்­திட்­டத்­தின் முதல் இரண்டு கட்­டங்­க­ளின் மூலம் கம்­போ­டி­யா­வில் இது­வரை 74,000க்கு மேற்­பட்ட கிரா­ம­வா­சி­கள் பலன் அடைந்­துள்­ள­னர். திட்­டத்­தின் மூன்­றாம் கட்­டம் அண்­மை­யில் சியாம் ரீப் மாகா­ணத்­தில் தொடங்­கப்­பட்­டது.

அடுத்த இரண்டு ஆண்­டு­களில் 160 எஸ்­ஐ­எஃப் தொண்­டூ­ழி­யர்­க­ளைக் கொண்டு சௌட் நிக்­கோம், சீ கிரெங் ஆகிய மாவட்­டங்­க­ளின் கிராம வீடு­களில் 600 நுண்­ணு­யிரி-மணல் நீர் வடி­கட்­டி­கள் நிறு­வப்­படும். இத­னால் மேலும் 5,700 கிரா­ம­வா­சி­க­ளுக்கு சுத்­த­மான குடி­நீர் கிடைக்­கும் என்று கூறப்­பட்­டது.

நிலை­யான சுகா­தார மேலாண்­மையை உறு­தி­செய்­யும் ஐக்­கிய நாடு­க­ளின் நிலை­யான வளர்ச்சி இலக்கு 6-ஐ இத்­திட்­டம் ஆத­ரிக்­கிறது. மேலும் இத்­திட்­டம் கம்­போ­டிய அர­சாங்­கத்­தின் 2025ஆம் ஆண்­டுக்­குள் கிராமப்புறவா­சி­க­ளுக்கு சுகா­தா­ர­மான வாழ்க்­கைச் சூழலை உரு­வாக்­கும் குறிக்­கோ­ளை­யும் அடைய உத­வு­கிறது.