அசுத்த நீரை நுண்ணுயிரி-மணல் நீர் வடிகட்டியின் மேற்பகுதியில் உள்ள தொட்டியில் ஊற்ற வேண்டும். தொட்டியின் அதிகபட்சக் கொள்ளளவு 12 லிட்டர்.
ஊற்றப்பட்ட அசுத்த நீர் நுண்ணுயிரி அடுக்கில் இறங்கி வடிகட்டும் மணலுக்குள் புகும்.
அதையடுத்து இரண்டு அடுக்குகளாக அமைக்கப்பட்டிருக்கும் கூழாங்கற்களைக் கடந்து வரும்போது அசுத்த நீர் தூய்மைப்படுத்தப்பட்டு சுத்தமான நீராக வெளிவருகிறது.
நிமிடத்திற்கு 400 மில்லி லிட்டர் எனும் அளவில் இதில் அசுத்த நீர் சுத்திகரிக்கப்படுகிறது.
ஊற்றப்பட்ட மொத்த அசுத்த நீரும் அதிகபட்சம் ஒரு மணி நேரத்திற்குள் சுத்தமான நீராக வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இவ்வாறு இயற்கை முறையில் குறைந்த செலவில் சுத்திகரிக்கப்படும் நீர் குடிக்கும் தரத்தில் இருக்கும் என்பது சிறப்பு.
ஏழ்மையின் பிடியில் இருக்கும் கம்போடிய மக்களின் மருத்துவச் செலவு பெரிதும் குறைய இந்த வடிகட்டிகள் கைகொடுத்துள்ளன.

