நுண்ணுயிரி- மணல் நீர் வடிகட்டி நிறுவப்பட்ட பிறகு மருத்துவச் செலவு பெரிதும் குறைந்துள்ளதாகக் கூறினார் சோண்ட்லே கிராமவாசியான மோனி ஹாங்.
இவருக்கு 8 வயது மகனும் 3 வயது மகளும் உண்டு. கணவருடன் வேளாண்மை மூலம் மாதம் 75 டாலர் வருவாய் ஈட்டும் இவரது குடும்பம், குளத்து நீர், கிணற்று நீரோடு மழை நீரையும் பயன்படுத்திய நிலையில் வாந்தி, வயிற்றுப்போக்கு, கடும் வயிற்றுவலி போன்ற உடல் உபாதைகளால் அடிக்கடி அவதிப்பட்டது.
மாதாமாதம் மருத்துவச் செலவுக்கு 25 டாலர் வரை தேவைப்பட்டது என்றும் இந்த வடிகட்டி மூலம் குடிக்கவும் சமைக்கவும் சுத்தமான நீரைப் பயன்படுத்துவதால் ஆரோக்கியம் மேம்பட்டுள்ளதாகவும் மோனி கூறினார்.
மற்றொரு கிராமவாசியான சொயென் தெங் எனும் 62 வயது மாது, எட்டுப் பேர் கொண்ட குடும்பத்தில் சுத்தமான குடிநீருக்காக மாதம் 60 டாலர் செலவில் தண்ணீர் கேன்களை வாங்கியதாகக் கூறினார்.
"நீரைக் குறைவாகவே பயன்படுத்திவந்தோம். இப்போது வடிகட்டி மூலம் தூய நீர் இலவசமாகக் கிடைக்கிறது.
"தாராளமாக நீரை அருந்தவும் பயன்படுத்தவும் முடிகிறது," என்று இவர் கூறினார்.

