அடுத்த தலைமுறைக்கு அடிப்படைச் சுகாதாரக் கல்வி

அடுத்த தலைமுறைக்கு அடிப்படைச் சுகாதாரக் கல்வி

1 mins read
cbf37e83-b0ec-4e45-8d7b-47799ab0d11d
கம்போடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அடிப்படைச் சுகாதாரப் பழக்கங்களைக் கற்பிக்கும் எஸ்ஐஎஃப் அறநிறுவனத்தொண்டூழியர்கள். -

சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து ஒன்­பது எஸ்­ஐ­எஃப் தொண்­டூ­ழி­யர்­கள் ஐந்து நாள் தொண்­டூ­ழி­யப் பய­ண­மாக கம்­போ­டியாவுக்கு அழைத்துச் செல்­லப்­பட்­ட­னர். இவர்­கள் நுண்­ணு­யிரி-மணல் நீர் வடி­கட்­டி­களை உரு­வாக்­கி­ய­தோடு பள்ளி மாண­வர்­க­ளுக்கு அடிப்­ப­டைச் சுகா­தா­ரப் பயிற்­சி­யும் அளித்­த­னர்.

தொடக்­க­ப் பள்ளி மாண­வர்­களுக்கு சுத்­த­மாகக் கைக­ழு­வும் முறை­யும் பற்­பசை பயன்­ப­டுத்தி சரியாகப் பல்­து­லக்­கும் முறை­யும் கற்­பிக்­கப்­ப­ட்டது. வீட்டிலும் அவர்கள் இவற்றைத் தொடர ஏதுவாக பற்­பசை, பல்­து­லக்கி, மறுசுழற்சி மூலம் தயாரிக்கப்பட்ட சவர்க்காரம், கைச் சுத்திகரிப்பான் போன்ற பொருள்­கள் அடங்கிய அன்பளிப்புப் பைகள் வழங்கப்பட்டன.

இது மிக­வும் பல­னுள்ள திட்­டம் என்று கூறிய ஆசி­ரி­யர் சோசி தாங், மாண­வர்­கள் சிலர் பெற்­றோ­ருக்­கும் குடும்­பத்­தி­ன­ருக்­கும் இவற்­றைக் கற்­றுத்­த­ரு­வ­தா­கச் சொன்­னார்.

கம்­போ­டிய கிரா­மப்­புற மக்­க­ளின் ஆரோக்­கி­யம், சுகா­தா­ரம் ஆகி­ய­வற்­றில் நல்ல மாற்­றத்தை ஏற்­ப­டுத்த தொடர்ந்து முயல்­வோம் என்று கூறி­னார் எஸ்­ஐ­எஃப் ஆளு­நர் லியன் வீ சியோவ்.

'வாட்­டர் பாஃர் கம்­போ­டியா' அறக்­கட்­டளை இயக்­கு­நர் மஸ்­சிமோ மையோ, "பிள்­ளை­கள் ஆரோக்­கி­ய­மாய் நன்கு படித்து வாழ்­வில் முன்­னேற இம்­மு­யற்­சி­கள் அடித்­த­ள­மாய் அமையும்," என்றார்.

படங்­கள்: இணை­யம்,

மோன­லிசா, எஸ்­ஐ­எஃப்,

வாட்­டர் ஃபார் கம்­போ­டியா அறக்­கட்­டளை.