ஆல்ப்ஸ் மலையில் உலா வரும் உலகின் ஆக நீளமான ரயில்

ஆல்ப்ஸ் மலையில் உலா வரும் உலகின் ஆக நீளமான ரயில்

2 mins read
93ab5851-b2db-4bf1-b0e4-0c6e392fd931
கிழக்கு சுவிட்­சர்­லாந்­தில் உள்ள கிராவ்­பண்­டன் எனும் ஊரில் சனிக்கிழமை அன்று உலகின் ஆக நீளமான பயணிகள் ரயில் சென்றது. படம்: ஏஎஃப்பி -

உல­கின் ஆக நீள­மான பய­ணி­கள் ரயில் சுவிட்­சர்­லாந்­தின் ஆல்ப்ஸ் மலை­களில் கடந்த சனிக்­கி­ழமை அன்று பாம்­பு­போல வளைந்து சுற்­றிச் சென்ற காட்சி உள்­ளூர் மக்­க­ளை­யும் சுற்­றுப்­ப­ய­ணி­க­ளை­யும் கவர்ந்­தி­ழுத்­தது.

கிட்­டத்­தட்ட இரண்டு கிலோ­மீட்­டர் நீள­முள்ள ரேட்­டி­யன் ரயில்வே அமைப்­பின் அந்த ரயி­லில் 100 ரயில் பெட்­டி­கள் இணைக்­கப்­பட்­டுள்­ளன.

தனது 175வது ஆண்டு நிறைவைக் கொண்­டா­டிய சுவிட்­சர்­லாந்­தின் புகழ்­பெற்ற ரேட்­டி­யன் ரயில்வே, உல­கின் ஆக நீள­மான பய­ணி­கள் ரயி­லுக்­கான புதிய சாத­னை­யைப் படைத்­துள்­ள­தாக அறி­வித்­தது. செந்­நி­றத்­தில் உள்ள அந்த ரயில் 1,910 மீட்­டர் நீள­முள்­ளது. அதில் உள்ள 100 ரயில் பெட்­டி­களை நான்கு நான்­கா­கத் தனித்­த­னியே பிரிக்­க­லாம்.

உல­கில் சுமார் மூன்று கிலோ­மீட்­டர் நீள­முள்ள சரக்கு ரயில்­கள் ஓடி­ய­போ­தும், இது­தான் ஆக நீள­மான பய­ணி­கள் ரயில் என்று கூறப்­பட்­டது.

சுவிட்­சர்­லாந்து உற்­பத்­தி­யின் நேர்த்­தியை அந்த ரயில் எடுத்­துக்­காட்­டி­ய­தாக ரேட்­டி­யன் ரயில்வே அமைப்­பின் தலை­வர் ரெடாட்டோ ஃபாசியாட்டி கூறி­னார்.

முன்­ன­தாக பெல்­ஜி­யத்­தைச் சேர்ந்த ரயில் ஒன்று உல­கின் நீள­மான ரயி­லுக்­கான சாத­னை­யைச் செய்­த­போ­தும் அது அதி­கா­ர­பூர்­வ­மாக அங்­கீ­க­ரிக்­கப்­ப­ட­வில்லை என்று ரேட்­டி­யன் ரயில்வே அமைப்­பின் பேச்­சா­ளர் கூறி­னார். அந்த ரயிலைவிட சுவிஸ் ரயிலின் நீளம் பலநூறு மீட்டர் அதிகம்.

கிழக்கு சுவிட்­சர்­லாந்­தில் உள்ள கிராவ்­பண்­டன் எனும் மலை ஊரில் சனிக்­கி­ழமை அன்று ரயில் பய­ணித்­தது. அதில் மொத்­தம் 150 பய­ணி­கள் ஏறிச் சென்­ற­னர்.

யுனெஸ்கோ உலக மர­பு­டை­மைத் தள­மான எழில்­மிகு அல்­புலா/பெர்­னினா ரயில் பாதை­யில் ரயில் பய­ணம் செய்­தது.

ரயி­லின் பய­ணம் நேர­டி­யாக பெரிய திரை­யில் ஒளி­ப­ரப்­பப்­பட்­டது. பர­ப­ரப்­பாக விற்ற நுழை­வுச்­சீட்­டு­களை சுமார் 3,000 பேர் வாங்கி, ரயில் பய­ணத்தை திரை­யில் பார்த்­த­னர்.