2.9 கி.மீ. தூரம் ஓடும் சவால்; ‘ராஃபிள்ஸ்’ ஆசிரியர் பங்கேற்பு

ஓய்­வு பெற்­ற தேசிய திடல்தட வீர­ரான யூகே ஷியாம், புற்­று­நோய் ஆய்­வுக்கு ஆத­ரவு அளிக்­கும் நோக்­கில் முதல் முறை­யாக சிங்­கப்­பூ­ரின் ஆகப்­பெ­ரிய ஓட்ட நிகழ்­வான 'ரன் ஃபோர் ஹோப் 2022'ல் பங்­கேற்று 2.9 கி.மீ. ஓட­வி­ருக்­கி­றார்.

தற்­போது, ராஃபிள்ஸ் கல்வி நிலை­யத்­தில் ஆசி­ரி­ய­ராகப் பணி­பு­ரி­யும் யூகே ஷியாம், புற்­று­நோய் பற்றிய விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தும் முயற்­சி­யில் இறங்­கி­யி­ருக்­கி­றார்.

இந்­தக் கொடி­ய­நோ­யால் உயி­ரி­ழந்த தன்­னு­டைய நண்­பர்­க­ளின் உற­வி­னர்­களை நினை­வு­கூர்ந்த அவர், "சமு­தா­யத்­தில் கடும் நோய்­க­ளால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு என்­னால் முடிந்த பங்­க­ளிப்பை இந்த ஓட்­டத்­தின் மூலம் தர விரும்­பு­கி­றேன்," என்­றார்.

"இது ஒரு சிறிய பங்­க­ளிப்­பாக இருந்தாலும் இதன் முலம் பய­ன­டை­வோர் அதி­கம்" என்று அவர் கூறி­னார்.

நாளை காலை 6.30 மணிக்கு மரினா அணைக்­கட்­டில் துவங்­கும் நேரடி ஓட்­டத்­தில் ஷியாம் மற்­ற­வர்களு­டன் பங்­கேற்­கி­றார்.

"ஒரு­வர் ஓடு­வ­தற்கு சீரான உடல் நிலை­யும், நல்ல உட­ல­மைப்­பும் இருக்க வேண்­டு­மென்­பது அவ­சி­ய­மல்ல," என்ற யூகே ஷியாம், "பொது­மக்­களும் புற்­று ­நோய் ஆராய்ச்­சிக்கு தங்­க­ளால் முடிந்ததை இதன் மூலம் பங்­க­ளிக்க முடி­யும்," என வலி­யு­றுத்தினார்.

இந்­நி­கழ்­வில் கலந்­து­கொள்­ப­வர் ­க­ளுக்கு அவர்­க­ளின் விருப்­பத்­திற்­கேற்ப மெய்­நி­கர், நேரில் அல்­லது இரண்டு வழி­க­ளி­லும் ஓடுவதற்­கான வசதி முதல்­மு­றை­யாக இந்த 29வது ஓட்­டம் ஏற்­பாடு செய்­யப்­பட்டு உள்­ளது.

நேரில் ஓடு­வ­தற்கான இரண்டு பிரிவுக­ளான 2.9 கி.மீ. தூரம் அல்­லது 10 கி.மீ. தூரம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் பங்கேற்று ஓட­லாம்.

மெய்­நி­கர் வழி­யாக ஓட விரும்­பு­வோர், தாங்­கள் விரும்­பிய இடங்­க­ளி­லும் விரும்­பிய நேரங்­களிலும் 29 கி.மீ. தூரம் அல்­லது 290 கி.மீ. தூரம் ஓடி­யும் மிதி­வண்டி ஓட்­டி­யும் பங்­கேற்­க­லாம்.

மெய்­நி­கர் ஓட்­டம், நாளை முதல் டிசம்­பர் 15ஆம் தேதி வரை­யில் நடைபெறும்.

29 கி.மீ, 290 கி.மீ. ஆகிய தூரங்­களை முடிக்­கும் முதல் மூன்று பேருக்­கும் அதிக உறுப்­பி­னர்­க­ளு­டன் குழு­வாகப் பங்­கேற்ற முதல் மூன்று நிறு­வனங்க­ளுக்­கும் புற்­று­நோய் ஆய்­வுக்கு அதிக பங்­க­ளித்­த­வர்களுக்­கும் பரி­சு­கள் காத்­துக்­கொண்டு இருக்­கின்­றன.

தொற்­றுநோய் கார­ணமாக கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக மெய்­நி­கர் வழி ஓட்­டம் நடந்தாலும் மக்­க­ளின் ஆத­ரவு இந்த உன்­னத நோக்­கத்­திற்கு அமோ­க­மாக இருந்­தது.

இந்­தாண்டு நேர­டி­யாக நடப்­ப­தால் மக்­க­ளின் ஆத­ரவு மேலும் அதி­கமாக­இருக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மர­ணத்­திற்கு முக்­கிய கார­ண­மாக புற்­று­நோய் விளங்­கு­கிறது என்­பதை சிங்­கப்பூர் புற்­று­நோய் பதி­வ­கத்­தின் அண்­மைய புள்ளி விவ­ரங்­கள் காட்­டு­ கின்­றன.

2015லிருந்து 2019 வரை புற்­று­நோ­யால் 28,500க்கும் மேற்­பட்ட சிங்­கப் ­பூ­ரர்­கள் மாண்டனர்.

அதோடு, நம் நாட்­டில் மொத்­தம் 78,204 புற்­று­நோய் சம்­ப­வங்­கள் பதி­வாகியுள்­ளன.

புற்­று­நோ­யைக் கண்­ட­றி­ய­வும் அதற்கு உரிய சிகிச்சை அளிக்­க­வும் நோயைத் தவிர்க்­கும் சாத்­தி­யங்­களை ஆரா­ய­வும் புற்­று­நோய் ஆராய்ச்சி உதவு ­கிறது.

2008ஆம் ஆண்­டி­லி­ருந்து இந்த ஓட்­டம், சிங்­கப்­பூர் புற்­று­நோய் நிலை­யத்­தின் புற்றுநோய் ஆராய்ச்சி நிதிக்கு ஆத­ரவு அளித்து வரு­கிறது.

இதி­லி­ருந்­து திரட்­டப்­படும் நிதி, புற்று நோய் ஆராய்ச்­சிக்கு நேர­டி­யா­கச் செல்­லும். அரிய வகை­ புற்று ­நோய் குறித்த விழிப்­பு­ணர்வை ஏற்­ ப­டுத்­தும் வகையிலும் இந்த ஓட்­டம் நடை­பெ­றும்.

இந்த ஓட்­டத்­தில் பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­கள் கடைப்­பி­டிக்­கப்­படுகின்றன.

பங்­கேற்பாளர்­கள் அனை­வ­ரும் முழு­மை­யாகத் தடுப்பூசி போட்­டி­ருக்க வேண்­டும் அல்­லது கடந்த 180 நாள்க­ளுக்­குள் கொவிட்-19 நோயி­லி­ருந்து குண­ம­டைந்­தி­ருக்க வேண்­டும்.

ஓட்­டத்­தில் பங்­கெ­டுக்க விரும்­பும் சிறு­வர்­கள் 12 வய­துக்கு மேல் இருக்க வேண்­டும்.

நேரடி ஓட்­டத்­திற்கு நவம்­பர் 4ஆம் தேதிக்­கும் மெய்­நி­கர் ஓட்­டத்­திற்கு டிசம்­பர் 15ஆம் தேதிக்­கும் முன்பு பதிவு செய்ய வேண்­டும்.

இந்த நிகழ்­வுக்கு தேசிய புற்­று­நோய் நிலை­ய­மும் ஃபோர் சீசென்ஸ் ஹோட்­ட­லும் இணைந்து ஏற்­பாடு செய்­துள்­ளன.

மேல் விவ­ரங்­கள் https://www.runforhope.sg/ இணையப் பக்­கத்­தில் இடம்­பெற்று உள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!