தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தயாராக உள்ளேன்: 'சுமைதாங்கி' நெய்மார் உறுதி

1 mins read

ரியோ டி ஜெனிரோ: கடந்த சில உல­கக் கிண்ண காற்­பந்­துப் போட்­டி­களில் பிரே­சி­லின் செயல்­பாடு ஏமாற்­றம் தரும் வகை­யில் இருந்­தது.

இம்­முறை கத்தாரில் நடை பெறும் போட்டியில் எப்­ப­டி­யா­வது மீண்­டும் முத்­திரை பதிக்க வேண்­டும் என்று பிரே­சி­லின் நட்­சத்­திர வீரர் நெய்­மார் தீவி­ரம் காட்டி வரு­கி­றார்.

உல­கக் கிண்­ணத்தை பிரே­சில் ஏந்த வேண்­டும் என்று அந்­நாட்டு ரசி­கர்­கள் எதிர்பார்க்­கின்­ற­னர்.

ரசி­கர்­க­ளின் இந்த எதிர்பார்ப்பு ­களை ஏற்று, சுமை­தாங்­கி­யாய் கள­மி­றங்கத் தயா­ராக இருப்­ப­தாக நெய்­மார் கூறி­னார்.

இதற்­காக நீண்­ட­கா­ல­மா­கவே பயிற்சி செய்து உடல் அள­வி­லும் மன­த­ள­வி­லும் தயா­ராக இருப்­ப­தாக அவர் தெரி­வித்­தார்.