70 இடங்களில் இலவச உலகக் கிண்ண ஆட்டங்கள்

70 இடங்களில் இலவச உலகக் கிண்ண ஆட்டங்கள்

1 mins read
2b4fd6b4-3f1b-42ed-be99-ba540fee40fe
சென்ற உலகக் கிண்ணப் போட்டியின் ஆட்டங்கள் ஸ்போர்ட்ஸ் ஹப் எனும் விளையாட்டு மையத்தில் திரையிடப்பட்டபோது திரண்ட ரசிகர்கள். கோப்புப் படம்: சிங்கப்பூர் விளையாட்டு மையம் -

சிங்­கப்­பூ­ரின் 70 இடங்­களில் காற்­பந்து ரசி­கர்­கள் வரும் உல­கக் கிண்­ணப் போட்­டி­யின் ஆட்­டங்­களை இல­வ­ச­மா­கக் காண­லாம். 'ஏக்­டிவ்­எஸ்ஜி' விளை­யாட்டு நிலை­யங்­கள், தேசிய நூல­கக் கட்­ட­டம், சாஃப்ரா கேளிக்கை நிலை­யங்­கள், 'ஸ்போர்ட்ஸ் ஹப்' எனும் விளை­யாட்டு மையம், சமூக மன்­றங்­கள் உள்­ளிட்ட இடங்­களில் கத்­தா­ரில் அரங்­கே­றும் உல­கக் கிண்­ணப் போட்­டி­யின் ஆட்­டங்­கள் இல­வ­ச­மா­கத் திரை­யி­டப்­படும்.

எந்த இடங்­களில் ஆட்­டங்­களைப் பார்க்­க­லாம் என்­பது மக்­கள் கழக இணை­யத்­த­ளத்­தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.