உல்வர்ஹேம்ப்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் உல்வர்ஹேம்ப்டன் வாண்டரர்ஸ் குழுவை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றுள்ளது ஆர்சனல். லீக் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள மான்செஸ்டர் சிட்டி, அதன் ஆட்டத்தில் தோல்வியடைந்ததால் சிட்டிக்கும் முதலிடம் வகிக்கும் ஆர்சனலுக்கும் இடையே உள்ள வித்தியாசம் ஐந்து புள்ளிகளாக அதிகரித்துள்ளது.
ஆர்சனலின் இரண்டு கோல்களையும் போட்டார் மார்ட்டின் ஓடகார்ட். லீக் பட்டியலில் இதுவரை தொடர்ந்து முதலிடம் வகித்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது மட்டுமின்றி நிர்வாகி மிக்கெல் அர்ட்டெட்டாவின்கீழ் கவனம் சிதறாமல் தொடர்ந்து சிறப்பாகவும் விளையாடி வந்துள்ளது ஆர்சனல்.

