நியூகாசல்: ஆர்சனலைப் போலவே அதிகம் தடுமாறாமல் முன்னேற்றம் காண்பதில் மட்டும் கவனம் செலுத்தி வந்துள்ள நியூகாசல் யுனைடெட், தொடர்ந்து வெற்றிப் பாதையில் பயணம் செய்கிறது.
செல்சியை 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது நியூகாசல். கோலைப் போட்டவர் முன்னாள் ஆர்சனல் வீரர் ஜோ வில்லக்.
தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்துள்ள செல்சி இந்த ஆட்டத்திலும் மீண்டுவரும் அறிகுறிகள் தென்படவில்லை. பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ள நியூகாசல் ஓய்வதாகவும் தெரியவில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு அபாரமாக விளையாடுகிறது நியூகாசல்.

