டி20 உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது இங்கிலாந்து

டி20 உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது இங்கிலாந்து

1 mins read
18dab23c-4a30-40c0-8ac9-ed149fa56350
மகிழ்ச்சியில் இங்கிலாந்தின் ஸ்டோக்ஸ் (இடது), லிவிங்ஸ்டோன். படம்: ஏஎஃப்பி -

மெல்­பர்ன்: இவ்­வாண்­டின் ஆண்­கள் டி20 உல­கக் கிண்­ணத்தை வென்­றுள்­ளது இங்­கி­லாந்து. ஆஸ்­தி­ரே­லி­யா­வின் மெல்­பர்ன் நக­ரில் நேற்று நடை­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் இங்­கி­லாந்து, பாகிஸ்­தானை ஐந்து விக்­கெட்­டு­கள் வித்­தி­யா­சத்­தில் வென்றது.

முத­லில் பந்­த­டித்த பாகிஸ்­தான் எட்டு விக்­கெட்­டு­கள் இழப்­பிற்கு 137 ஓட்­டங்­களை மட்­டுமே எடுத்­தது. ஆட்­டத்­தில் வெல்ல இங்­கி­லாந்து 138 ஓட்­டங்­களை எடுக்­க­வேண்­டி­யி­ருந்­தது.

அதற்­குப் பிறகு 19 ஓவர்­களில் ஐந்து விக்­கெட்­டு­கள் இழப்­பிற்கு இலக்கை அடைந்­தது இங்­கி­லாந்து.

பந்­த­டித்­த­போது ஒரு கட்­டத்­தில் இங்­கி­லாந்து சிர­மப்­பட்­டது. பாகிஸ்­தா­னின் பந்து வீச்­சா­ளர்­க­ளைச் சமா­ளிக்­க­மு­டி­யா­மல் மூன்று விக்­கெட்­டு­கள் இழப்­பிற்கு 45 ஓட்­டங்­களை எடுத்­தது, அதற்­குப் பிறகு நான்கு விக்­கெட்­டு­கள் இழப்­பிற்கு 84 ஓட்­டங்­களை எடுத்­தி­ருந்­தது.

எனி­னும், அதைத் தொடர்ந்து சவாலை நன்கு எதிர்­கொண்டு வெற்றி­கண்­டது இங்­கி­லாந்து. 52 ஓட்­டங்­களை எடுத்து ஆட்­டத்­திலிருந்து வெளி­யே­றா­மல் இருந்­தார் இங்­கி­லாந்து நட்சத்திரம் பென் ஸ்டோக்ஸ். பாகிஸ்­தா­னின் பந்து வீச்­சா­ளர் ஷாஹீன் அஃப்ரிடி காய­முற்­றார். அதை ஸ்டோக்ஸ் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திக்­கொண்­டார்.

சேம் கியூ­ரான், அடில் ராஷிட் ஆகி­யோ­ரின் சிறப்­பான பந்து வீச்சே இங்­கி­லாந்­தின் வெற்­றிக்கு முக்­கி­ய கார­ணம்.

இந்த வெற்­றி­யின் மூலம் டி20 உல­கக் கிண்­ணம், 50 ஓவர்­ ஆட்­டங்­க­ளைக் கொண்ட உல­கக் கிண்­ணம் ஆகிய இரண்­டை­யும் வென்­றுள்ள முதல் அணி என்ற பெரு­மையை இங்­கி­லாந்து பெற்­றுள்­ளது. அதோடு, இரண்டாவது முறை­யாக இக்குழு டி20 உல­கக் கிண்­ணத்­தைக் கைப்­பற்­றி­யுள்­ளது. முன்னதாக 2010ஆம் ஆண்டு கிண்ணத்தை வென்றது.