வெறுப்பைக் கொட்டிய ரொனால்டோ

மான்­செஸ்­டர்: போர்ச்­சு­கல் நட்­சத்­தி­ரம் கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ, தான் விளை­யா­டும் இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் குழு­வான மான்­செஸ்­டர் யுனை­டெட்­டின் நிர்­வாகி எரிக் டென் ஹாக் மீது தனக்கு மதிப்­பில்லை என்று தெரி­வித்­துள்­ளார். தற்­போ­தைய காற்­பந்­துப் பரு­வம் தொடங்­கு­வ­தற்கு முன்பு டென் ஹாக் தன்னை குழு­வி­லி­ருந்து வலுக்­கட்­டா­ய­மாக வெளி­யேற்ற முயன்­ற­தா­க­வும் ரொனால்டோ கூறி­னார்.

"டென் ஹாக் என்னை மதித்து நடக்­கா­த­தால் எனக்கு அவர் மீது மதிப்­பில்லை," என்று 'பியர்ஸ் மோர்­கன் அன்­சென்­சர்ட்' எனும் நிகழ்ச்­சி­யில் இடம்­பெற்ற நேர்­கா­ணல் ஒன்­றில் கூறி­னார் ரொனால்டோ.

"எனக்கு மதிப்பு தரா­த­வரை என்­றுமே மதிக்­க­மாட்­டேன்," என்று ரொனால்டோ குறிப்­பிட்­டார். குழு­வின் நிர்­வாகி மட்­டு­மின்றி ஓரிரு விளை­யாட்­டா­ளர்­களும் தன்னை மதிக்­க­வில்லை என்­றும் அவர் கூறி­னார்.

அண்­மை­யில் டோட்­டன்­ஹம் ஹாட்ஸ்­ப­ருக்கு எதி­ராக யுனை­டெட் மோதிய பிரி­மி­யர் லீக் ஆட்­டத்­தில் 37 வயது ரொனால்டோ மாற்று ஆட்­டக்­கா­ர­ரா­கக் கள­மி­றங்க மறுத்­ததைத் தொடர்ந்து ரொனால்டோ குழு­வி­லி­ருந்து தற்­கா­லி­க­மாக நீக்­கப்­பட்­டார்.

நோய் கார­ண­மாக கடந்த இரு ஆட்­டங்­களில் ரொனால்டோ விளை­யா­ட­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது. ஆனால், நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற ஃபுல்ஹ­முக்கு எதி­ரான ஆட்­டத்­தில் அவர் இடம்­பெ­று­வார் என்­று ­கூறப்­பட்­டது.

நேர்­கா­ண­லில் ரொனால்டோ இவ்­வாறு பேசி­யி­ருப்­பது யுனை­டெட்­டைப் பெரி­தும் கோபப்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஆகக் கடைசி நில­வ­ரப்­படி யுனை­டெட் நேர­டி­யாக கருத்து ஏதும் வெளி­யி­ட­வில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!