யுனைடெட்டை மீட்ட இளம் வீரர்

யுனைடெட்டை மீட்ட இளம் வீரர்

1 mins read
33f7a78c-d654-44c1-b30b-4b2750646f94
-

லண்­டன்: இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் காற்­பந்­தில் ஃபுல்ஹ­மும் மான்­செஸ்­டர் யுனை­டெட்­டும் சந்­தித்த ஆட்­டம் 1-1 எனும் கோல் கணக்­கில் சம­நி­லை­யில் நிறை­வ­டை­ய­வி­ருந்­தது. ஆட்­டம் முடிய சுமார் 30 விநா­டி­கள் எஞ்­சி­யி­ருந்த வேளை­யில் வெற்றி கோலைப் போட்­டார் யுனை­டெட்­டின் அலெ­ஹாண்­டிரோ கார்­னாச்சோ (படம்).

சென்ற லீக் ஆட்­டத்­தில் ஆஸ்­டன் வில்­லா­வி­டம் தோல்­வி­ய­டைந்த யுனை­டெட் இந்த ஆட்­டத்­தி­லும் பிற்­பா­தி­யில் சரி­யாக ஆடா­மல் இருந்­தது. 18 வயது அர்­ஜென்­டீ­னி­ய­ரான கார்­னாச்சோ குழு­வைக் காப்­பாற்­றி­னார்.

ஓர­ளவு நன்­றாக விளை­யா­டி­னா­லும் யுனை­டெட் கோல் போட சிர­மப்­பட்டு வரு­கிறது. நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற ஆட்­டத்­தி­லும் பல கோல் வாய்ப்பு­களை நழு­வ­விட்­ட­தால் தடு­மா­றி­யது.

பிரி­மி­யர் லீக் பட்­டி­ய­லில் ஐந்­தாம் இடத்­தில் யுைனடெட் உள்­ளது. நான்­கா­வது இடத்­தில் உள்ள டோட்­டன்­ஹம் ஹாட்ஸ்­ப­ரை­விட ஓர் ஆட்­டம் குறை­வாக விளை­யா­டி­யி­ருந்­தா­லும் மூன்றே புள்­ளி­கள் வித்­தி­யா­சத்­தில் அக்­கு­ழு­விற்­குப் பின்­னால் உள்­ளது யுனைடெட்.

மற்­றொரு பிரி­மி­யர் லீக் ஆட்­டத்­தில் பிரைட்­டனை 2-1 எனும் கோல் கணக்­கில் வென்­றது ஆஸ்­டன் வில்லா. அக்­கு­ழு­வின் இரண்டு கோல்­க­ளை­யும் போட்­ட­வர் முன்­னாள் லிவர்­பூல் வீரர் டேனி இங்ஸ். புதிய நிர்­வாகி யூனாய் எம­ரி­யின் தலை­மை­யில் தொடர்ந்து மீண்டு வந்­து­கொண்­டி­ருக்­கிறது ஆஸ்­டன் வில்லா.