கித்தோ: உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியின் 'ஏ' பிரிவில் போட்டியை ஏற்று நடத்தும் கத்தார், எக்வடோர், செனகல், நெதர்லாந்து ஆகிய குழுக்கள் இடம்பெறு
கின்றன.
கத்தாருக்கும் எக்வடோருக்கும் இடையிலான ஆட்டம் போட்டி யைத் தொடங்கிவைக்கிறது.
இந்த ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி வரும் சனிக்கிழமை நள்ளிரவு நடைபெறுகிறது. இந்நிலையில், உலகக் கிண்ணப் போட்டியில் களமிறங்கும் தனது ஆட்டக்காரர்களை எக்வடோர் அறிவித்துள்ளது.
26 ஆட்டக்காரர்களைக் கொண்ட பட்டியலில் நட்சத்திர தற்காப்பு ஆட்டக்காரர் பைரன் கஸ்தில்லோ (படம்) இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தகுதி பெறாதபோதிலும் தகுதிச் சுற்றில் கஸ்தில்லோவை
எக்வடோ களமிறக்கியது என்று சிலி குரல் எழுப்பியும் உலகக் கிண்ணப் போட்டியில் எக்வடோர் போட்டியிடலாம் என்று விளையாட்டுத்துறைக்கான சமரச நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்தது.
இருப்பினும், கஸ்தில்லோவை எக்வடோர் பயிற்றுவிப்பாளர் குஸ்தாவோ ஆல்வாரோ தேர்ந்தெடுக்கவில்லை.

