பாலைவனத்தில் 'குளுகுளு' உலகக் கிண்ணம்

பாலைவனத்தில் 'குளுகுளு' உலகக் கிண்ணம்

1 mins read
4c60c83d-c13f-4426-9e8a-1dd8d95a9184
குளிர்சாதன வசதிகளைக் கொண்ட கத்தாரின் அல் வாக்கிரா நகரில் இருக்கும் அல் ஜனூப் அரங்கம். படம்: கத்தார்2022 -

தோஹா: மத்­திய கிழக்கு நாடான கத்­தார் பாலை­வ­னப் பகு­தி­யில் அமைந்­துள்­ளது. அத­னால் அங்கு வெயில் சுட்­டெ­ரிக்­கக்­கூ­டும்.

இவ்­வாண்டு செப்­டம்­பர் மாதம் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் கத்­தா­ருக்­குப் பய­ணம் மேற்­கொண்­ட­போது வெப்­ப­நிலை 42 டிகிரி செல்­சி­யஸ். அப்போது உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்டி தொடங்­கு­வ­தற்கு ஆறே வாரங்­கள் எஞ்­சி­யி­ருந்­தன.

இப்­ப­டிப்­பட்ட பரு­வ­நி­லை­யை எதிர்கொள்ளும் கத்­தா­ரில் எப்­படி காற்­பந்­தாட்­டங்­கள் இடம்­பெ­றும் என்ற கேள்வி பல தரப்பினரிடையே நிலவியது. அதற்­குப் பதி­ல­ளிக்­கும் வகை­யில் அமைந்­துள்­ளது கத்­தாரின் அல் வாக்­கிரா நக­ரில் இருக்­கும் அல் ஜனூப் விளை­யாட்­டரங்கம்.

வெயிலை எதிர்­கொண்டு உல­கக் கிண்­ணப் போட்­டியை நடத்த தீர்­வு­களை வழங்­கி­ய­வர் சாட் அப்­துல்-அஸிஸ் அப்­துல்-கானி என்­ற­ழைக்­கப்­படும் ஒரு­வர். 'டாக்­டர் கூல்', அதா­வது குளி­ரூட்­டும் நிபு­ணர் என்று செல்­ல­மாக அழைக்­கப்­படும் அவர் கத்­தார் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் பொறியியல் பிரிவில் பேரா­சி­ரி­ய­ரா­கப் பணி­யாற்­று­ப­வர்.

அல் ஜனூப் விளை­யாட்­ட­ரங்­கில் சுமார் 300 சிறு உணர்கரு­வி­கள் பொருத்­தப்­பட்­டுள்­ளன. வெப்­ப­நிலை, காற்­றின் ஈரப்­ப­தம், விளை­யாட்­டா­ரங்­கில் உள்ள ரசி­கர்­கள் அணிந்­தி­ருக்­கும் ஆடை­கள் உள்­ளிட்­ட­வற்­றின் தொடர்­பி­லான தக­வல்­களை உணர்­க­ரு­வி­க­ள் சேகரிக்கும்.

அந்தத் தக­வல்­க­ளைக் கொண்டு அதி­கா­ரி­கள் தேவை­யான அளவு விளை­யாட்­ட­ரங்­கிற்­குக் குளி­ரூட்­டு­வர்.

வெப்­ப­நி­லை­யைச் சமா­ளிக்க விளை­யாட்­டா­ளர்­க­ளுக்­கும் ரசி­கர்­களுக்­கும் உதவ இவ்­வாண்­டின் உல­கக் கிண்­ணப் போட்டி கத்­தாரின் குளிர்­கா­ல­மான நவம்­பர் மாதத்­துக்கு மாற்றி வைக்­கப்­பட்டது. இருந்­தா­லும், போட்டி நிறைவடைந்த பிறகும் வசதியான முறையில் காற்பந்தாட்டங்களை நடத்த இந்த ஏற்பாடு தொடர்ந்து கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.