டென்மார்க் படக்குழுவினரிடம் மன்னிப்புக் கேட்ட கத்தார்

டென்மார்க் படக்குழுவினரிடம் மன்னிப்புக் கேட்ட கத்தார்

1 mins read

தோஹா: டென்­மார்க்­கைச் சேர்ந்த படக்­குழு ஒன்றை கத்­தா­ரின் பாது­காப்பு அதி­கா­ரி­கள் மிரட்­டி­யி­ருக்­கின்­ற­னர். கத்­தார் தலை­ந­கர் தோஹா­வில் நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பான அச்­சம்­ப­வத்­தைத் தொடர்ந்து கத்­தா­ரின் உல­கக் கிண்­ணப் போட்­டி­யின் அரசு ஏற்­பாட்­டுக் குழு சம்­பந்­தப்­பட்ட டென்­மார்க் படக்­கு­ழு­வி­டம் மன்­னிப்­புக் கேட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

டென்­மார்க்­கைச் சேர்ந்த ராஸ்­முஸ் டான்ட்­ஹோல்ட் எனும் செய்­தி­யா­ளர் நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பான ஒரு நிகழ்ச்­சி­யில் பேசிக்­கொண்­டி­ருந்­த­போது பாது­காப்பு அதி­கா­ரி­கள் அவரை மிரட்­டி­யது பதி­வான காணொளி சமூக வலைத்­த­ளங்­களில் பல­ரால் பகி­ரப்­பட்­டது.

டான்ட்­ஹோல்ட் முத­லில் பாது­காப்பு அதி­கா­ரி­க­ளு­டன் கோபத்­து­டன் பேசி­னார்.

அதற்­குப் பிறகு தனது கேமரா உள்­ளிட்ட கரு­வி­களை அவர்­கள் உடைக்க நினைத்­த­தாக அவர் குறிப்­பி­ட்டார்.