பெல்ஜியத்தின் கடைசி வாய்ப்பு

பெல்ஜியத்தின் கடைசி வாய்ப்பு

1 mins read
211d92cf-ed77-4844-aa53-9784fe2c2d36
பெல்ஜியத்தின் கெவின் டி பிரய்ன (நடுவில்). படம்: ராய்ட்டர்ஸ் -

தோஹா: சுமார் 30 ஆண்­டு­க­ளுக்கு முன்பு உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­களில் பெல்­ஜிய அணி­யின் மீது அதிக எதிர்­பார்ப்பு இருந்­த­தில்லை. எனி­னும், அண்­மைக் கால­மாக இந்த அணி நட்­சத்­தி­ரப் பட்­டா­ளத்­து­டன் கள­மி­றங்கி வந்­துள்­ளது.

மேலும், வர­லாற்­றில் முதன்­மு­றை­யாக உல­கக் கிண்­ணப் போட்­டி­யில் மூன்­றா­வது நிலை­யில் முடித்­தது. அந்­நி­கழ்வு 2018ஆம் ஆண்டு ரஷ்­யா­வில் நடை­பெற்ற சென்ற உல­கக் கிண்­ணப் போட்­டி­யில் இடம்­பெற்­றது.

எனி­னும், இத்­தனை நட்­சத்­தி­ரங்­க­ளு­டன் இந்த பெல்­ஜி­யம் அணி உல­கக் கிண்­ணத்தை வெல்­லும் என்று எதிர்­பார்த்த பல தரப்­பி­னர் ஏமாற்­றம் அடைந்­த­னர். அதைச் சரி­செய்ய கத்­தா­ரில் அரங்­கே­றும் இவ்­வாண்­டின் உல­கக் கிண்­ணப் போட்டி கடைசி வாய்ப்­பைத் தரு­கிறது.

கார­ணம், கிண்­ணத்­தைக் கைப்­பற்­றக்­கூ­டி­ய­வர்­கள் என்று கரு­தப்­படும் பல பெல்­ஜிய நட்­சத்­தி­ரங்­க­ளுக்கு வய­தாகி வரு­கிறது. அணி­யின் பல வீரர்­கள் 30 வய­தைத் தாண்­டி­விட்­ட­னர்.