ஜோக்கோவிச் மீதான தடை நீக்கம்

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வில் டென்­னிஸ் நட்­சத்­தி­ரம் நோவாக் ஜோக்­கோ­விச்­சுக்கு எதி­ராக விதிக்­கப்­பட்­டி­ருந்த தடை விலக்­கப்­பட்­டுள்­ளது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ராக தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள ஜோக்­கோ­விச் மறுத்­தி­ருந்­தார். அதைத் தொடர்ந்து அவர் ஆஸ்­தி­ரே­லி­யா­வில் நடை­பெ­றும் போட்­டி­களில் பங்­கேற்­ப­தற்­குத் தடை விதிக்­கப்­பட்­டது.

இவ்­வாண்டு ஜன­வரி மாதம் ஜோக்­கோ­விச்­சின் விசா ரத்து செய்­யப்­பட்­டது. இப்­போது தடை விலக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அவர் மீண்­டும் விசா­வுக்கு விண்­ணப்­பம் செய்­ய­லாம்.

அந்த விவ­கா­ரத்­தைப் பின்­னுக்­குத் தள்­ளு­வது குறித்து ஜோக்­கோ­விச்­சும் ஆஸ்­தி­ரே­லி­யப் பொது­வி­ருது ஏற்­பாட்­டா­ளர்­களும் கடந்த சில வாரங்­க­ளாக ஆலோ­சித்து வந்­த­னர்.

அதே வேளை­யில், ஜோக்­கோ­விச்­சுக்­காக ஆஸ்­தி­ரே­லிய அர­சாங்­கத்­தி­டம் கோரிக்கை விடுக்­கப்­போ­வ­தில்லை என்­றும் போட்­டி­யின் அதி­கா­ரி­கள் தெரி­வித்­தி­ருந்­த­னர்.

ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்­குப் பய­ணம் மேற்­கொள்­வோர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டி­ருக்­கத் தேவை­யில்லை என்று கடந்த ஜூலை மாதம் அறி­விக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து ஜோக்­கோ­விச்­சுக்கு எதி­ரான மூவாண்­டுத் தடை விலக்­கப்­பட்­டுள்­ளது. உல­க­ள­வில் கொவிட்-19 விதி­மு­றை­கள் பல பெரிய அள­வில் தளர்த்­தப்­பட்­டுள்­ளன.

வரும் ஆஸ்­தி­ரே­லி­யப் பொது­வி­ரு­துப் போட்­டி­யில் 22வது முறை­யாக கிராண்ட் சிலாம் விருதை வெல்­லும் இலக்­கைக் கொண்­டுள்­ளார் ஜோக்­கோ­விச்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!