தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குணதிலக பிணையில் விடுவிப்பு

1 mins read
2fae631b-f91a-4a9d-9b63-925ce05f7903
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக. கோப்புப் படம்: ஏஎஃப்பி -

சிட்னி: பாலி­யல் வன்­முறை விவ­கா­ரத்­தில் பிடி­பட்ட இலங்கை கிரிக்­கெட் வீரர் தனுஷ்க குண­தி­லக பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளார். பிணைத் தொகை 150,000 ஆஸ்­தி­ரே­லிய டாலர் என்று தெரி­விக்­கப்­பட்­டது. எனி­னும், சமூக ஊடகங்கள், 'டிண்­டர்' ஆகி­ய­வற்­றைப் பயன்­ப­டுத்த அவ­ருக்­குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

குண­தி­லக 11 நாள்­க­ளுக்­குத் தடுப்­புக் காவ­லில் வைக்­கப்­பட்­டி­ருந்­தார்.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் ஆண்­கள் டி20 உல­கக் கிண்­ணப் போட்டி நடை­பெற்­றுக்­கொண்­டி­ருந்­த­போது இம்­மா­தம் ஆறாம் தேதி­யன்று சிட்னி நக­ரில் உள்ள ஹயட் ரீஜன்சி ஹோட்­ட­லில் 31 வயது குண­தி­லக கைது­செய்­யப்­பட்­டார். அனு­ம­தி­யின்றி பாலி­யல் உறவு வைத்­துக்­கொண்­ட­தன் தொடர்­பில் அவர் மீது நான்கு குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன.

குற்­றச்­சாட்­டு­க­ளுக்­கான நீதி­மன்ற விசா­ரணை இன்­னும் தொடங்­க­வில்லை. குண­தி­லக குற்ற ஒப்­பு­தலோ குற்ற மறுப்போ இதுவரை தெரி­விக்­க­வில்லை.

சென்ற மாதம் 29ஆம் ேததி­யன்று குண­தி­ல­கவும் சம்­பந்­தப்­பட்ட பெண்­ணும் 'டேட்­டிங்' எனும் துணை தேடும் செய­லி­யின் மூலம் சந்­தித்­த­தா­க­வும் இம்­மா­தம் இரண்­டாம் தேதி­யன்று இரு­வ­ரும் சந்­திக்­கத் திட்­ட­மிட்­டி­ருந்­த­தா­க­வும் நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

சிட்னி நக­ரின் மத்­திய வர்­த­த­கப் பகுதி­யின் பல இடங்­களில் இரு­வ­ரும் பல­முறை மது­பா­னம் அருந்­தி­ய­தா­கக் காவல்­துறை கூறி­யது. அதற்­குப் பிறகு அவர்­கள் அப்பெண்­ணின் வீட்­டுக்­குச் சென்­ற­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது. பெண்­ணின் உயி­ருக்கு ஆபத்து விளை­விக்­கும் வகை­யில் குண­தி­லக நடந்­து­கொண்­ட­தா­க­வும் நீதி­மன்ற ஆவ­ணங்­கள் குறிப்­பிட்­டன.