உலகக் கிண்ணம் வென்ற அர்ஜென்டினா அணித் தலைவர் லயனஸ் மெஸ்ஸி ஐந்து சாதனைகளைத் தகர்த்து கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்று இருக்கிறார். அவர் படைத்த சாதனைகள்:
♦ ஆக அதிகமான உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடியவர் - 26
♦ அணித்தலைவராகச் செயல்பட்ட போட்டிகள் - 19
♦ ஓர் ஆட்டக்காரராகப் ஐந்து வெவ்வேறு உலகக் கிண்ணத் தொடர்களில் பங்கேற்பு
♦ உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது - 11
♦ ஐந்து உலகக் கிண்ணத் தொடர்களில் சக வீரர்கள் கோலடிக்க உதவி

