பெலே: தகுதியானவர் மெஸ்ஸி

பெலே: தகுதியானவர் மெஸ்ஸி

1 mins read

ரியோ டி ஜெனிரோ: உல­கக் கிண்­ணத்தை வெல்ல லய­னல் மெஸ்ஸி தகு­தி­யா­ன­வரே என்று பிரே­சில் முன்­னாள் காற்­பந்து சகாப்தமும்­முறை உல­கக் கிண்­ணம் வென்­ற­வ­ரு­மான பெலே தெரி­வித்­துள்­ளார்.

"இன்று (நேற்று), காற்­பந்து விளை­யாட்டு எப்­பொ­ழு­தும்­போல் மனங்­க­வ­ரும் வகை­யில் தன் கதை­யைச் சொல்­லி­ய­வாறே இருக்­கிறது. மெஸ்ஸி தன் முத­லா­வது உல­கக் கிண்­ணத்தை வென்­றுள்­ளார். அவ­ரது காற்­பந்­துப் பய­ணத்­தில் அது தகு­தி­யா­னதே," என்று பெலே தமது இன்ஸ்­ட­கிராம் பக்­கத்­தில் பதி­விட்­டுள்­ளார்.

அது­போல், 'ஹாட்­ரிக்' நாய­கனான பிரான்­சின் எம்­பாப்­பே­வை­யும் அவர் மெச்­சி­யுள்­ளார்.

"என் ஆரு­யிர் எம்­பாப்பே உலகக் கிண்ண இறு­திப் போட்­டி­யில் நான்கு கோல்­களை அடித்­துள்­ளார். எதிர்­கா­லக் காற்­பந்­தின் அற்­பு­த­மான அவ­ரது ஆட்­டத்­தைக் கண்­டது என்­ன­வோர் அரு­மை­யான பரிசு," என்று கூறி­யுள்­ளார் பெலே.

உல­கக் கிண்ண அரை­யி­று­திச் சுற்­றுக்கு முதன்­மு­றை­யா­கத் தகுதி­பெற்ற ஆப்­பி­ரிக்க அணி­யான மொரோக்­கோ­வையும் அவர் பாராட்­டத் தவ­ற­வில்லை.

குரோ­வே­ஷி­யா­விற்கு எதி­ரான காலி­று­தி­யில் தோற்று வெளி­யே­றிய பிரே­சில் அணி­யின் நட்­சத்­திர ஆட்­டக்­கா­ரர் நெய்­மார், தமது இன்ஸ்­ட­கி­ராம் பக்­கத்­தில் மெஸ்ஸி கிண்­ணத்­து­டன் இருக்­கும் படத்­தைப் பதி­விட்டு, "வாழ்த்­து­கள் சகோ­தரா!" என்று குறிப்­பிட்­டுள்­ளார்.