உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரின் சிறந்த வீரருக்கான தங்கப் பந்து விருதை 2ஆம் முறையாக வென்றார் அர்ஜென்டினா அணித்தலைவர் லயனல் மெஸ்ஸி. மூன்று ஆட்டங்களில் கோலேதும் விட்டுத்தராத அவ்வணியின் கோல்காப்பாளர் எமிலியானோ மார்ட்டினெஸ் தங்கக் கையுறை விருதையும் அதே அணியின் என்ஸோ ஃபெர்னாண்டஸ் சிறந்த இளம் வீரருக்கான விருதையும் கைப்பற்றினர். இம்முறை மொத்தம் எட்டு கோல்களை அடித்த பிரெஞ்சு ஆட்டக்காரர் கிலியன் எம்பாப்பே தங்கக் காலணியைத் தனதாக்கினார். படம்: ராய்ட்டர்ஸ்
விருது வென்ற விளையாட்டாளர்கள்
1 mins read
-

