அர்ஜென்டினா வென்றதால் 1,500 பேருக்கு இலவச பிரியாணி

அர்ஜென்டினா வென்றதால் 1,500 பேருக்கு இலவச பிரியாணி

1 mins read

திருச்­சூர்: அர்­ஜென்­டினா அணி உல­கக் கிண்­ணம் வென்­றதை நேற்று 1,500 பேருக்கு இல­வ­ச­மாக கோழி பிரி­யாணி வழங்­கிக் கொண்­டா­டி­னார் இந்­தி­யா­வின் கேரள மாநி­லம், திருச்­சூ­ரி­லுள்ள 'ராக்­லண்ட் ஹோட்­டல்' உண­வுக் கடை­யின் உரி­மை­யா­ளர் ஷிபு. அர்­ஜென்­டினா கிண்­ணம் வென்­றால் 1,000 பேருக்கு இல­வச பிரி­யாணி வழங்­கு­வ­தாக ஷிபு முன்­ன­தாக அறி­வித்­தி­ருந்­தார். இந்­நி­லை­யில், நேற்­றுக் காலை­யி­லேயே ஏரா­ள­மா­னோர் திரண்­ட­தால் அந்த எண்­ணிக்­கையை 1,500ஆக அவர் உயர்த்தினார்.