கிரிக்கெட்: வரலாறு படைத்த இங்கிலாந்து

கிரிக்கெட்: வரலாறு படைத்த இங்கிலாந்து

1 mins read

கராச்சி: பாகிஸ்தானில் அந்த நாட்டு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்ற முதல் கிரிக்கெட் அணி எனும் பெருமையைப் பெற்றது பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி. கராச்சியில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 304 ஓட்டங்களும் இங்கிலாந்து 354 ஓட்டங்களும் எடுத்தன. இங்கிலாந்தின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ரேஹான் அகமது ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்த, 2வது இன்னிங்சில் பாகிஸ்தான் 216 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அதன்பின் மீண்டும் பந்தடித்த இங்கிலாந்து அணி, 167 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை எளிதாக எட்டி, சாதனை படைத்தது.