துடிப்பான மீட்பு உடற்பயிற்சி

எல்­லா­வி­த­மான உடற்­ப­யிற்­சி­களும் வியர்த்து, சோர்வை ஏற்­ப­டுத்த வேண்­டும் என்­பது அவ­சி­யம் அல்ல என்று உட­லு­று­திப் பயிற்­சி­யா­ளர்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

உட­லு­று­தி­யு­டன் இருக்க தொடர்ந்து விளை­யாட்­டு­க­ளி­லும் உடற்­ப­யிற்­சி­யி­லும் ஈடு­பட வேண்­டும். பல­த­ரப்­பட்ட பயிற்­சி­க­ளைச் செய்­வது முக்­கி­யம்.

தசை­க­ளுக்கு ஓய்வு கொடுப்­பது உறு­திப்­ப­டுத்த வேண்­டும். முறை­யான சத்­து­ணவு இருக்க வேண்­டும் என்று பயிற்­று­விப்­பா­ளர்­கள் வலி­யு­றுத்­து­கின்­ற­னர்.

கடு­மை­யான உடற்­ப­யிற்­சிக்கு முன்பு உடலை அதற்­குத் தயார்ப் படுத்த வேண்­டும். அதை­வி­டுத்து முன் பயிற்­சி­கள் இல்­லா­மல் தீவி­ரப் பயிற்­சி­யில் ஈடு­பட்­டால் பல்­வேறு தொந்­த­ர­வு­கள் ஏற்­படும்.

தீவிர உடற்­ப­யிற்­சி­யில் ஈடு­படும் பொதுத் துறை ஊழி­ய­ரான 49 வயது சோங் வான் யியங், கடந்த ஆண்­டு­களில் பல்­வேறு காயங்­களை அடைந்­துள்­ளார்.

அவ­ரது வலது முழங்­கா­லில் காயம் ஏற்­பட்­டது. வலது தோள்­பட்டை வலி­யால் அவ­தி­யுற்­றார்.

தீவிர உடற்­ப­யிற்­சிக்­குப் பிறகு உடலை வழக்க நிலைக்­குக் கொண்டு வரு­வ­தற்­காக ‘டிரை­பாடி’ உட­லு­றுதி நிலை­யத்­தில் சோங், துடிப்­பான மீட்பு உடற்­ப­யிற்­சி­யில் ஈடு­ப­டத் தொடங்­கி­னார். அதன் பின்­னர் விருப்­ப­மான தீவி­ரப் பயிற்­சி­யில் ஈடு­பட அவர் திட்­ட­மிட்­டுள்­ளார்.

முது­கெ­லும்­பிற்­கான உடலை வளைக்­கும் உடற்­ப­யிற்சி, கால் முட்­டியை மடக்­கிச் செய்­யும் உடற் பயிற்சி, தோள்­பட்­டையை இல­கு­வாக்­கும் பயிற்சி போன்­ற­வற்­றில் குறைந்­தது ஒரு நிமி­டம் அவர் ஈடு­பட்டு வரு­கி­றார்.

இதி­லும் வியர்க்­கிறது. ஆனால் வித்­தி­யா­ச­மான உடற்­ப­யிற்சி என்­கி­றார் சோங்.

துடிப்பான உடல் மீட்பு உடற்­ ப­யிற்­சி­கள் தீவி­ர­மற்ற உடற்­ப­யிற்­சி­களை உள்­ள­டக்­கி­யது.

கடுமையான உடற்­ப­யிற்­சிக்­கு முன்பும் பிறகும் உடலை நிலைப் ­ப­டுத்­து­வ­தற்­கான பயிற்சி இது.

இதில் கன­மான எடை­யைத் தூக்­கு­தல், நீச்­சல், ஓடு­தல் ஆகி­ய­வற்­றுக்கு மாற்­றாக யோகா, தசை­ க­ளைத் தளர்த்­து­வது போன்ற மித­மான உடற்­ப­யிற்­சி­கள் இடம்­பெற்று உள்­ளன.

உடலுறுதிப் பயிற்­று­விப்­பா­ள­ரான ஹான்­செல் சிங், 33, கடந்த அக்­டோ­பர் மாதம் ‘டிரை­பாடி ஃபிட்னஸ்’ (Tribody Fitness) நிலை­யத்­தில் இத்­த­கைய பயிற்­சி­ க­ளைத் தொடங்­கி­னார். தீவிர உடற்­ப­யிற்­சிக்குத் தின­மும் பலர் வரு­கின்­ற­னர். ஆனால் புதி­ய­வர்­கள், போது­மான ஓய்வு இல்­லா­மல் தீவி­ரப் பயிற்­சி­யில் காயம் அடைந்து­ வி­டுவார்­களோ என்­பது அவ­ரது கவலை.

கடுமையான பயிற்­சிக்­குப் பிறகு தசை வலு­வாக வள­ரும். ஆனால் தசை தீவி­ரப் பயிற்­சிக்குப் பழக வேண்­டும். இதுதாட்ன துடிப்­பான மீட்பு உடற் ­ப­யிற்­சி­க்கான நோக்கம் என்றார் திரு சிங்.

இரு­பதுகளில் எளி­தில் மீள முடி­யாத அள­வுக்கு உடற்­ப­யிற்­சி­களை அவர் செய்து வந்­தார். தற்­போது தமது வாடிக்கையாளர்­கள் அதுபோன்ற முறையற்ற கடுமையான பயிற்சிகளில் ஈடுபடுவதை அவர் தடுத்து வருகிறார்.

உட­லு­றுதி உடற்­ப­யிற்­சி­யா­ள­ரான வி. துரை­ரா­ஜா­சிங்­கம், 40, சரி­யான சத்­து­ணவு, போது­மான ஓய்வு ஆகி­ய­வை­யும் மிக முக்­கி­யம் என்று குறிப்­பிட்­டார்.

உடற்­ப­யிற்­சிக்கு முன்பு தசை, உடல் அசைவுப் பயிற்­சி­களை செய்ய வேண்­டும் என்று அவர் பரிந்­து­ரைக்கிறார்.

அது தசை­க­ளின் ரத்த ஓட்­டத்தை மேம்­ப­டுத்­து­வ­தோடு எளி­தாக தீவி­ரப் பயிற்­சிக்­குப் பிறகு மீண்டு வர முடி­யும் என்று துரை ராஜா­சிங்­கம் கூறு­கி­றார்.

பெரும்­பா­லான வாடிக்­கை­யா­ளர்­கள் நாள்­தோ­றும் நெடு­நே­ரம் உட்­கார்ந்து இருக்­கி­றார்கள்.

இவர்­கள் உட­ன­டி­யாக தீவிர உடற்­ப­யிற்­சி­யில் ஈடு­ப­டக் கூடாது என்­கி­றார் அவர்.

உட­லைத் தயார்ப்­ப­டுத்­தும் பயிற்­சி­கள், தசை­க­ளைத் தளர்த்­தும் உடற்­ப­யிற்­சி­கள் முத­லில் செய்­வது முக்­கி­யம். தங்­க­ளின் உடல் எந்த அள­வுக்­குத் தாங்­கும் என்­பதை அறிந்து வைத்­தி­ருக்க வேண்­டும் என்று ‘ரைட் ஃபிட் ஜிம்’ (The Right Fit Gym) நிறு­வ­ன­ரான துரை­ரா­ஜா­சிங்­கம் தெரி­விக்­கி­றார். மூன்று மாதங்­க­ளுக்கு ஒரு முறை பயிற்சி இல்­லா­மல் அவர் ஓய்வு எடுக்­கி­றார்.

திரு துரை­ரா­ஜா­சிங்­கம், ஓய் வில்­லா­மல் ஒரு வாரம் தொடர்ந்து உடற்­ப­யிற்­சி­யில் ஈடு­படும் அள­வுக்கு அவ­ரது உட­லு­றுதி உள்ளது. ஆனால் மற்றவர்கள் அப்படியல்ல. போதுமான ஓய்வு, மீண்டு வருவதற் கான நேரம் தேவை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!